Connect with us

Cinema History

டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு வாலிக்குமான அறிமுகம் எப்படி நடந்துச்சு தெரியுமா… சுவாரஸ்ய பின்னணி!

வாலிபக் கவிஞர் என்று புகழ்பெற்ற கவிஞர் வாலி, தனது முதல் வாய்ப்புக்காகச் செய்த சுவாரஸ்யமான சம்பவம் தெரியுமா.. அவருக்கும் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்குமான அறிமுகத்தின்போது நடந்த சம்பவம் ரொம்பவே சுவாரஸ்யமானது.

எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி விஜய், அஜித், தனுஷ், சிம்பு வரையில் பல தலைமுறையாக பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பல பாடல்கள் காலத்தால் அழியாப் புகழ்பெற்றவை. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இவர் எழுதியிருந்த இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்ற வரிகள் எம்.ஜி.ஆர் ரசிகர்களாலும் அ.தி.மு.க தொண்டர்களாலும் இன்றைக்கும் கொண்டாடப்படும் வரிகள். அப்படி புகழ்பெற்ற வாலி, எப்படி ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை வந்தார் தெரியுமா?

அந்த காலகட்டங்களில் மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சௌந்தர்ராஜன் புகழ்பெற்ற பாடகராகக் கவனம் பெற்றிருந்தார். இன்றைய காலகட்டத்தைப் போல சமூக வலைதளங்கள் ஆதிக்கம் இல்லாத அன்றைய சூழலில் வாய்ப்புகளுக்காக நடிகர்கள் தொடங்கி மற்ற கலைஞர்கள் யாவரும் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏறி, இறங்குவது வழக்கம். பெரும்பாலான நடிகர்களும் கலைஞர்களும் இப்படித்தான் வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள். ஆனால், வாலி இதில் விதிவிலக்கு.

இதையும் படிங்க: கொட்டும் மழை… கவிஞர் வாலியை காரில் ஏற்றிச்சென்ற முக்கிய நபர்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

ஒரு தபால் அட்டையில், தனக்கு நன்றாகக் கவிதை எழுத வரும் என்று தன்னைப் பற்றிய சிறுகுறிப்பை எழுதி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு ஒரு பாடலையும் எழுதி அனுப்பியிருந்தாராம் வாலி. ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த அந்த கடிதத்தைப் படித்த டி.எம்.எஸ், உனக்கு பெரிய திறமையிருக்கிறது. உடனே சென்னை புறப்பட்டு வா என்று வாலிக்குப் பதில் கடிதம் எழுதினாராம்.

அதையடுத்தே வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தாராம். அதன்பிறகு, நடிகர் நாகேஷோடு ஒரே அறையில் தங்கியிருந்து, பல கஷ்டங்களையும் அனுபவித்து தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக உயர்ந்தார். டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு வாலி தபால் அட்டையில் எழுதி அனுப்பிய பாடல், இன்று ஒலிக்காத கோயில்களே இல்லை என்று சொல்லலாம். அந்தப் பாடல், `கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ என்கிற பாடல்.

google news
Continue Reading

More in Cinema History

To Top