Connect with us
ajith

Cinema News

ஆசை ஆசையாய் கட்டிய வீடு! இப்படி ஆக்கிட்டாங்களே? அஜித் வீட்டில் திடீரென்று கை வைத்த அதிகாரிகள்

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் தற்போது டாப் 3 நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் எல்லா பிரச்சினைகளும் முடிந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈச்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் அஜித் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. அது ஏன் என்பதற்கான விளக்கத்தை மாநகராட்சி அதிகாரிகளும் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: காக்கானு சொல்லி இத்தன நாளா ஏமாத்திருக்காங்க! பராசக்தி படத்தின் ‘கா..கா..கா’ பாடலில் இருக்கும் ட்விஸ்ட்…

அஜித் வெளிநாட்டில் படப்பிடிப்பிற்காக சென்றுள்ள சமயத்தில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டிருப்பது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு நவீன வசதிகளுடன் கூடிய அந்த வீட்டை முற்றிலும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கும் வசதிகளுடன் அந்த வீட்டை அஜித் கட்டியிருந்தார்.

ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் தற்போது தன் குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் அஜித். அதுமட்டுமில்லாமல் பல லட்சம் செலவழித்தும் தன் வீட்டை சுற்றி பெரிய சுற்றுச்சுவரையும் கட்டியிருந்தார். அந்த சுற்றுச்சுவர்தான் இப்போது இடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க: அரை டவுசர்ல சும்மா கும்முன்னு இருக்க!.. இளசுகளை மயக்கும் பிக்பாஸ் ரவீனா..

அந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்றுக் கொண்டு வருகிறதாம்.இந்த சூல்நிலையை கருத்தில் கொண்டே அதிகாரிகள் அஜித் வீட்டு சுற்றுச்சுவரை இடித்திருப்பதாக விளக்கம் அளித்திருக்கின்றனர்.

அஜித் வீட்டில் இருந்தும் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: இது ஹிட் அடிக்காது!. விஜய் ரிஜெக்ட் பண்ணிய கதை!. ஆர்வமா நடித்து பல்பு வாங்கிய சூர்யா…

google news
Continue Reading

More in Cinema News

To Top