இனி நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடிப்பேன் சார்... மிரண்டு போன சிம்பு.. புல்லரிக்க வைத்த அந்த இயக்குனர்.

by Manikandan |
simbu_main_cine
X

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மிகவும் உற்சாகமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சிம்பு நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

தற்போது படக்குழு இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சிம்புவின் தந்தை உடல்நிலை சரியில்லா காரணத்தால் மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் சிம்பு. அவரது தந்தைக்கு உதவும் வகையில், கடந்த வாரம் அமெரிக்க சென்றனர். இப்பொது, சிகிச்சை பெற்று அவரது தந்தை சீராக இருப்பதால் இந்தியா திரும்பினார் சிம்பு.

அந்த வகையில், இந்தியா திரும்பியதும் தனது 'வெந்து தணிந்தது காடு' படத்தினை படக்குழு அவருக்கு போட்டு காமித்துள்ளது. படத்தை பார்த்து அசந்து போன சிம்பு காதல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் அருமையாக வந்திருக்கிறது என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கூறினாராம்.

இதையும் படிங்களேன் - தனுஷ் செய்யப்போகும் வேண்டாத வேலை… வேதனையின் உச்சத்தில் ரசிகர்கள்..

மேலும் அவர் கூறுகையில், படத்தின் மேக்கிங் நல்லா வந்திருப்பதாக இயக்குனரை பாராட்டியுள்ளார். மேலும், நீங்கள் எப்போ பட நடிக்க கூப்பிட்டாலும் வந்துருவேன், கால் சீட்டு உடனே கொடுத்து விடுவேன் என்று படத்தை பார்த்து அசந்து பொய் பேசியுள்ளார்.

Next Story