புஷ்பா 2 கொடுத்த ஹைப்புக்கு வொர்த்தா?.. படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம் இதோ!..

by ramya suresh |
pushpa 2
X

pushpa 2

புஷ்பா 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஹைப் இருந்த நிலையில் கொடுத்த ஹைப்புக்கு படம் வொர்த்தா? இல்லையா? என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

புஷ்பா 2:

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கின்றது புஷ்பா 2 திரைப்படம். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் 12000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: புஷ்பா 2-வில் இதெல்லாம் செம ஹலைட்ஸ்!.. ரசிகர்கள் சொல்வது என்ன?!…

ப்ரீ புக்கிங்கில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளான இன்று நிச்சயம் 300 கோடியை தொடும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

pushpa

pushpa

கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தை கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.

படத்தின் கதை:

அல்லு அர்ஜுனான புஷ்பா ராஜ் சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் ஒரு அசைக்க முடியாத தலைவராக மாறுகிறார். தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகின்றார். ஃபஹத் பாசிலான எஸ்பி பன்வர் சிங் புஷ்பாவை தோற்கடிப்பதற்கும் சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுப்பதற்கும் ஒவ்வொரு முறை முயற்சி செய்து வருகின்றார். ஆனால் தொடர்ந்து தோல்வி மட்டுமே கிடைத்து வருகின்றது.

pushpa

புஷ்பாவின் மனைவியான ஸ்ரீவள்ளி முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகின்றார். ஆனால் புஷ்பாவை பார்த்த முதல்வர் அவர் ஒரு கடத்தல்காரன் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு மறுக்கின்றார். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் முதல்வரை நீக்கிவிட்டு சித்தப்பாவை அந்த பதவியில் அமர வைப்பதற்கு புஷ்பா முடிவு செய்து இருக்கின்றார்.

அதே வேளையில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு வரும் சந்தன கட்டைகளை தொடர்ந்து எஸ் பி பன்வர் சிங் பிடிக்க முயற்சி செய்கின்றார். புஷ்பாவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த ஆபத்துகள் வருகின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளையும் புஷ்பா ராஜ் எப்படி சமாளிக்கின்றார்? அதன் பிறகு என்ன நடக்கின்றது? என்பதை தான் இந்த திரைப்படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

படத்தின் பிளஸ் மைனஸ்:

படத்தின் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய புஷ்பராஜ் அதன் பிறகு ஒரு சிண்டிகேட் தலைவராக மாறுகின்றார். அதில் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி சமாளிக்கின்றார் என்பதை இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக காட்டி இருக்கின்றார் இயக்குனர் சுகுமார்.

pushpa

pushpa

புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாஸில் காம்பினேஷன் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. முதல் பாகத்தில் புஷ்பராஜ் மற்றும் ஸ்ரீவள்ளி கெமிஸ்ட்ரி எந்த அளவுக்கு நன்றாக இருந்தது அதே அளவுக்கு இந்த படத்திலும் மிகச் சிறப்பாக கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்டாகி இருந்தது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகளில் அல்லு அர்ஜுன் பட்டையை கிளப்பி இருக்கின்றார்.

இதையும் படிங்க: சன் டிவி சூப்பர் ஹிட் தொடர்களின் இன்றைய ப்ரோமோ அப்டேட்… மிஸ் பண்ணிடாதீங்க..

ரஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாக மிகச் சிறப்பாக நடித்து அசதி இருக்கின்றார். இப்படத்தில் பாடல்கள் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பாடல்கள் வேண்டும் என்றே கதையில் புகுத்தப்பட்டிருப்பது போல் தெரிகின்றது. மேலும் புஷ்பராஜ் மற்றும் பன்வர் சிங் ஒருவரை ஒருவர் உயரங்கள் பெரிய அளவுக்கு லாஜிக் இல்லாதது போல் தெரிகின்றது. பகத் பாஸிலின் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் சுகுமார் அந்த அளவுக்கு வலு கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு தோன்றும் வகையில் இருக்கின்றது.

Next Story