என்ன வாழ விடுங்க!.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான கேப்ரியல்லா....
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சண்டை போடாமல் நன்றாக விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை.
எனவே, சின்னத்திரை சீரியலில் நடிக்க முடிவெடுத்தார். அதன் விளைவு ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார்.
இந்நிலையில், ‘உங்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்குமே ஏன் சீரியல் போன்ற சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறீர்கள்?’ என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் கூறிய கேபி ‘இதை நான் சிறியதாக கருதுகிறேன் என நான் கருதினால் நீங்கள் நினைப்பது தவறு. டிவியோ, சினிமாவோ எல்லாமே ஒரு ஊடகம்தான். ஒரு நடிகராக நாம் எப்படி சிறப்பாக செயல்படுகிறோம் என்பதே முக்கியம். சின்னத்திரை மூலம் ஒவ்வொரு நாளும் அனைவரின் வீட்டிற்கே விசிட் அடிப்பது சின்ன விஷயம் அல்ல’ என தெரிவித்தார்.
அதன்பின் மீண்டு ஒரு ரசிகர் அதே கேள்வியை கேட்டார். இதில் கடுப்பான கேபி ‘மேலும் ஒருவர் இதே கேள்வியை கேட்டால் அல்லது என்னை பார்த்து சிரித்தால், உங்க கருத்தை நான் கேட்டானா இல்லை உங்கள் வேலை பற்றி கமெண்ட் செய்தேனா?’ வாழ விடுங்க’ என பதிலளித்துள்ளார்.
செல்லாக்குட்டிய கோபப்படுத்தாதீங்கப்பா!..