தளபதியை விட அதான் முக்கியம்...தம்மாதுண்டு காரணத்துக்கு பிகில் வாய்ப்பை தட்டிக் கழித்த கேபி...!

சின்னத்திரையில் வெள்ளித்திரை நடிகைகள் அளவுக்கு முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கேப்ரியல்லா. இவர் தற்போது விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் ஒரு லீடு ரோலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
ஈரமான ரோஜாவே சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. இவர் தன் 9 வயதில் டெலிவிஷனுக்குள் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்ப்பான ஜோடி ஜூனியரில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். அவரின் நடனத்தை பார்த்து ஒட்டு மொத்த யுனிட்டும் வாயடைத்தது.
பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலம் இறங்கி தன் சாதுர்யமான பேச்சால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் இவரை ஒரு பேட்டியில் சந்தித்த போது சில தகவல்களை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில் “ பாலா சாரின் தார தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கும் ஆசை. அவர் படம் என்றால் நடிக்க வேண்டாம் ஒரிஜினாலாவே இருந்தால் போதும், அதுதான் எனக்கு ஆசை, ஆனால் சில பல காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. மீண்டும் விஜய் சார் நடித்த பிகில் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் அந்த நேரத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன், அதனால் தான் படிப்பு தான் முக்கியம் என அந்த வாய்ப்பையும் தட்டிக் கழித்து விட்டேன் “ என்று கூறினார். எல்லாரும் விஜய் கூட பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுக்க மாட்டோமா என ஏங்கும் நிலையில் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்தது கேபியின் நண்பர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறினார்.