ஹார்ட்டு வீக்கு!.. இவ்ளோ அழக தாங்காது செல்லம்!.. கேப்ரியல்லாவின் லுக்கில் மயங்கிய ரசிகர்கள்...
விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் சிறுமியாக இருக்கும்போதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 3 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார்.
டீன் ஏஜை எட்டியதும் சினிமாவில் நுழைய முயற்சி செய்தார். விஜய் டிவியிலிருந்து சென்று ஹீரோவான சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருக்கும் தூதுவிட்டு பார்த்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: உன்ன பாத்தவுடனே ஃபிளாட் ஆயிட்டோம்!.. க்யூட் லுக்கில் காலி செய்யும் அமலாபால்!…
அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு 100 வரை அந்த வீட்டில் இருந்தார். போட்டியில் வெல்வார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் 5 லட்சம் பெட்டியை எடுத்துகொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இருக்கவே இருக்கு விஜய் டிவி என கணக்குப்போட்ட கேப்ரியல்லா ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’-வில் நடிக்க துவங்கினார். இப்போது முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். இந்த சீரியல் மூலம் சீரியல் ரசிகைகளிடம் பிரபலமாகிவிட்டார்.
இதையும் படிங்க: அழகாலே கொல்லுறியே!.. மனசத்தான் அள்ளுறியே!.. ஓவியாவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்…
ஒருபக்கம் தன்னுடைய அழகான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் நேற்று ஓணம் புடவையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.