
Entertainment News
உனக்கு ஏம்மா இந்த ராஜாமாதா வேல!…. வேற மாதிரி போஸ் கொடுத்த கேப்ரியல்லா..
‘ஜோடி நம்பர்’ ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார்.
அதில் கிடைத்த புகழால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

gabriella
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: இன்னும் உனக்கு கிளாமர் குறையல!…தொப்புளை காட்டி கிறங்கடித்த கனிகா….
இந்நிலையில், பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் ஏற்ற ராஜமாதா போல் புடவை அணிந்து வேற மாதிரி போஸ் கொடுத்து ‘இந்த கங்குபாய் கெட்டப் விஜய்டெலி விருதுக்காக’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைக்கண்ட சில நெட்டிசன்கள் ‘உனக்கு ஏம்மா இந்த ராஜாமாதா வேலை’ என பதிவிட்டு வருகின்றனர்.