Categories: Entertainment News

திருமண கோலத்தில் அதிர்ச்சி கொடுத்த கேப்ரியல்லா…இது என்னம்மா திடீர்னு!…

‘ஜோடி நம்பர்’ ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார்.

அதில் கிடைத்த புகழால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென பட்டுப்புடவை மற்றும் தங்க நகைகள் அணிந்து மணப்பெண் போல போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அது தான் நடித்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி என பதிவிட்டுள்ளார்.

Published by
சிவா