பெரிய பட்ஜெட்னா மட்டும் ஓடுற!.. நாங்க இழிச்சவாயனுங்களா?.. யோகி பாபுவை விளாசிய தயாரிப்பாளர்!..

by Saranya M |   ( Updated:2025-05-06 10:01:51  )
யோகி பாபு
X

#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகர் யோகி பாபுவை பற்றி தயாரிப்பளர் பிரபதிஸ் சாம்ஸ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் யோகி பாபு யாமிருக பயமே, வீரம், அரண்மனை, காக்கா முட்டை, வேதாளம், ரெமோ, மெர்சல், கோலமாவு கோகிலா, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் மண்டேலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பொம்மை நாயகி, போட், லக்கி மேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்த பிறகு காமெடியன் கேரக்டரை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் யோகி பாபு இரண்டு கதாப்பாத்திரத்தையும் சமமாக பேலன்ஸ் செய்து வருகிறார். யோகி பாபு தனது நடிப்பு ஆற்றலால் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்து, தமிழ் திரையுலகில் வெளியாகும் படங்களில் அவர் இல்லாத படமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகர் பாலிவுட் வரை சென்று கலக்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஜெயிலர் 2, சூர்யா 45, மிஸ் மேகி, கிரிக்கெட் போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.இந்நிலையில் தயாரிப்பாளர் பிரபதீஸ் சாம்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் யோகி பாபு பெரிய பட்ஜெட் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் சென்று சின்ன பட்ஜெட் படங்களை தவிர்த்துவிடுகிறார். பெரிய பட்ஜட் படத்தில் சும்மாக்கூட 4 மணி நேரம் உட்கார வச்சு அனுப்புவாங்க.. ஆனால், நாங்க அப்படி இல்ல இரண்டு மணி நேரம் கூட கால் ஷீட் கொடுத்து அவங்க போகனும்னா அனுப்பி வச்சிடுவோம். அவர் சின்ன பட்ஜெட்ல தான் பத்து படம் பன்றாரு பெரிய பட்ஜெட்ல ஒரு படம் தான் பன்றாரு, ஆனால் அவங்க கூப்டா புரமோஷனுக்கு போறாரு, நாங்க கூப்டா அவாய்ட் பன்றாரு, இனி நாங்க கண்டிப்பா அதை கேட்ப்போம் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

முன்னதாக கஜானா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபதீஸ் சாம்ஸ் யோகி பாபு நடிக்கவே லாயக்கில்லாதவர் என பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Next Story