latest news

ஆரம்பமே இப்படியா…? யூத் படத்தில் எனது பாடலை திருடிவிட்டார்கள்- கானா பாடகர் தினேஷ் வேதனை..

தமிழ் சினிமவில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போடும் படம் யூத். கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ 5.5 கோடி. ஆனால் படம் வெளியாகி 6 நாட்களில் இதுவரை மொத்தம் ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்னும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் கென் கருணாஸ் பாடும் நான் ஆசைபட்ட பொண்ணு பேரு மோனிஷா என்ற பாடல் வரும். அந்த காட்சி ரசிகர்கள் கொண்டாடினார்கள். இப்போது அந்த் பாடலுக்குதான் பிரச்சனை துவங்கியுள்ளது.

இந்த பட்லை கானா தினேஷ் என்பவர் பாடி ஆல்பமாக 12 அண்டுகளுக்கு முன் வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் தங்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல கானா பாடகர் தினேஷ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,

நான் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆல்பம் பாடல் பாடியிருந்தேன். நான் ஆசப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா, காதலிச்சா ஃபீலிங்ஸா’ என்ற அந்தப் பாடல் ஒட்டு மொத்த தமிழ்நாடு முழுவதுமே செம ஹிட் அடித்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள கென் கருணாஸ் நடித்த யூத் திரைப்படத்தில் அந்தப் பாட்டை அப்படியே பயன்படுத்தியுள்ளனர். அதுவும் என் அனுமதி இல்லாமல் என் பாடலை திருடிப் போட்டுவிட்டார்கள். இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. என் பாடலில் வேறு ஒருவரின் வாய்ஸ் வருகிறது. அந்தப் பாடலை கென் பாடியுள்ளார்.

ஒரு ஆல்பம் தயார் செய்ய நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடம் கஷ்டப்படுகிறோம். ஆனால் இப்படி உழைப்பை அப்படியே திருடிப் போட்டுவிடுகிறார்கள். அந்தப் பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது அந்தப் பாடலில் என் பெயரை முறையாக பதிவு செய்ய வேண்டும். எனக்கு இதற்காக பணம் எதுவும் தேவையில்லை; என் உழைப்பிற்கான அங்கீகாரம் மட்டுமே வேண்டும். என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கானா தினேஷ் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சினிமா உலகில் ஒருவரின் உழைப்பை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி காப்புரிமை மீறலாகும் என்பது அனைவரும் அறிந்ததே.
படம் வெளியாகி இத்தனை நாட்கள் கழித்து இப்போது ஏன் புகார் அளிக்கிறீர்கள்? என்றுக் கானா தினேசை நெட்டீச்ன்கள் கேள்விகள் கேட்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக, யூத் படத்தின் இயக்குநர் கென் கருணாஸ் அல்லது தயாரிப்பு தரப்பிலிருந்து இதற்கான உரிய விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

6 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

7 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

9 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

22 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago