
Cinema News
சூர்யாவை இதில் இழுக்க வேண்டாம் – ஜெய்பீம் பட இயக்குனர் விளக்கம்
பலரிடம் பாராட்டை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
5 கோடி நஷ்ட ஈடுகேட்டு பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதோடு, சூர்யா நடிப்பில் வெளியாகு திரைப்படங்களை வெளியிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம், அவர் வெளியே நடமாட முடியாது என்றெல்லாம் பாமகவினர் மிரட்டல்கள் விடுத்தனர். மேலும், சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தார்.
ஆனாலும், அக்கட்சியினரை தவிர ரசிகர்கள், பொது ஜனங்கள், மற்ற அரசியல்வாதிகள் என பலரும் அப்படத்தை பலரும் பாராட்டினர். அதோடு டிவிட்டரில் #WeStandwithSuriya என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆனது. இந்த பிரச்சனையை விட்டு விடும்படி இயக்குனர் பாராதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு கடிதமும் எழுதினார். ஆனால், சூர்யாவின் மீதே தவறு என்கிற ரீதியில் அன்புமணி ராமதாஸ் பாரதிராஜாவுக்கு கடிதம் எழுதினார்.
இந்த விவகாரம் இப்படி நிற்காமல் சென்று கொண்டிருந்த நிலையில், ஜெய்பீம் பட இயகுக்குனர் ஜானவேல் ராஜா ஜெய்பீம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்,
தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துர்தஷ்டவசமானது. பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமே சூர்யாவின் நோக்கம்.
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.
சில வினாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் ஷூட்டிங்கின் போது எங்கள் கவனத்தில் பதியவில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அந்த காலண்டரை காட்டுவது என்பது எங்களின் நோக்கமல்ல. இயக்குநராக நான் மட்டுமே பொறுபேற்க வேண்டிய விஷயம் இது. இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன்.
என பதிவிட்டுள்ளார்.