இந்த டைம்ல மட்டும் விஜய்கிட்ட பேசவே முடியாது! இருந்தாலும் தளபதி ரொம்ப சூடாதான் இருப்பார் போல

by Rohini |
vijay
X

vijay

Actor Vijay: தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கோலிவுட்டில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே இருந்து வருகிறார். இன்று விஜய் படம் ரிலீஸாகிறது என்றால் கோலிவுட் சினிமாவில் அதிக கலெக்‌ஷனை அள்ளித்தரும் படமாகவே விஜய் படம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே பெரிய அளவில் பிஸினஸும் நடந்து விடுகிறது. விஜயை நன்கு தெரிந்த அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் விஜய் இந்தளவு பெரிய நட்சத்திரமாக வருவார் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க: சீசன் தொடங்கிய போது போட்ட பிளானை பக்காவா செய்த மாயா!… இதுக்கு தான் பூர்ணிமா கூட சுத்துனதா? செல்லாது.. செல்லாது!…

ஆனால் எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் ஆசை அவருடைய ஆழ் மனதில் இருந்ததனால்தான் அவருடைய இலக்கை அடைய முடிந்தது. தற்போது விஜய் தளபதி 68 அதாவது GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுவதால் அவ்வப்போது ரசிகர்களை விஜய் சந்தித்து வருகிறார். ஆனால் விஜயை பார்த்த பல பேர் அவரின் தோற்றத்தில் வித்தியாசங்கள் இருப்பதாக கமெண்டில் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: பைனல் ஸ்டேஜ் ஏறப்போகும் போட்டியாளர்கள்!… பிரதீப்பை மறக்காத ரசிகர்கள்… பிபி டீம் செஞ்சத பாத்தீங்களா?

மீசை இல்லாமல் கிளீன் ஷேவில் இருக்கும் விஜயின் முகத்தில் சில மாற்றங்கள் இருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் கணேஷ் வெங்கட் விஜயை குறித்து சில விஷயங்களை கூறினார். விஜயிடம் இருந்து நிறைய விஷயங்களை கணேஷ் வெங்கட் கற்றுக் கொண்டாராம்.

சூட்டிங் நேரத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போனையே எடுக்க மாட்டாராம். அந்தளவுக்கு வேலையில்தான் அதிக கவனம் செலுத்துவாராம் விஜய். அதுமட்டுமில்லாமல் சுற்றி நடிக்கும் நடிகர்களையும் கண்காணித்துக் கொண்டே இருப்பாராம்.

இதையும் படிங்க: பைனல் ஸ்டேஜ் ஏறப்போகும் போட்டியாளர்கள்!… பிரதீப்பை மறக்காத ரசிகர்கள்… பிபி டீம் செஞ்சத பாத்தீங்களா?

எப்படி டையலாக் பேசுகிறார்கள், எப்படி நடிக்கிறார்கள் என கவனித்துக் கொண்டே இருப்பாராம். சில சமயங்களில் மற்ற நடிகர்கள் டையலாக்கை மறந்து விட்டாலும் விஜய்தான் அதை எடுத்துக் கொடுப்பாராம். இதை தான் நான் விஜயிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என கணேஷ் வெங்கட் கூறினார்.

Next Story