Cinema History
கங்கை அமரன் அடித்த கமெண்ட்!. கடுப்பான பாலச்சந்தர்!. இளையராஜாவின் பிரிவுக்கு முதல் பொறி!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தவர் இசைஞானி இளையராஜா. கிராமத்து இசையை கொடுத்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். அன்னக்கிளி திரைப்படம் மூலம் தனது இசைப்பயணத்தை துவங்கினார். பதினாறு வயதினிலே படத்தில் ராஜா போட்ட பாட்டுகள் தமிழகத்தின் மூலை முடுக்கிலும் பாடியது. அதன்பின் அவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவை தனது இசையால் கட்டி ஆண்டார்.
இப்போது அவருக்கு 80 வயது ஆகிறது. ஆனால், இப்போதும் ஆக்டிவாக இசையமைத்து வருகிறார். பல இசைக்கச்சேரிகளிலும், சினிமா விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். ஒருபக்கம் அவரின் பேச்சுக்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதுபற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதே இல்லை.
இதையும் படிங்க: நடிகையை அந்த விஷயத்துக்காக டார்ச்சர் செய்தாரா மக்கள் செல்வன்? அடிமடியிலயே கைவச்சா சும்மா விடுவோமா?
80களில் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் ராஜா மட்டுமே இசையமைத்து வந்தார். ஆனால், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தேவாவின் வரவுக்கு பின் பல இயக்குனர்கள் ராஜாவை விட்டுவிட்டு அவர்கள் பக்கம் சென்றனர். ராஜாவுக்கு நெருக்கமாக இருந்த பாரதிராஜாவும் அவரை பிரிந்தார். அதேபோல் பாலச்சந்தர் அவர் தயாரித்த ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தார். மேலும், கீரவாணி என்கிற மரகதமணி உள்ளிட்ட சில புதிய இசையமைப்பாளர்களை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.
பாலச்சந்தர் இயக்கி இளையராஜா கடைசியாக இசையமைத்த திரைப்படம் புதுப்புது அர்த்தங்கள். அதன்பின் இருவரும் இணையவே இல்லை. இந்த படத்தில் பின்னணி இசைக்காக பாலச்சந்தர் காத்திருந்தபோது ராஜா வர நேரமானதால் அந்த படத்தில் அவர் போட்ட ஒரு பாடலையே பாலச்சந்தர் தேர்ந்தெடுத்து பயன்படுத்திவிட்டார். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் இல்லாமல் எப்படி அதை முடிவு செய்ய முடியும்?. இனிமேல் பாலச்சந்தர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டார்.
இதுதான் பலரும் சொல்வது. அதேநேரம் அதற்குமுன்பே அதாவது பாலச்சந்தர் சிந்து பைரவி எடுத்த போதே இருவருக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டதாக டாக்டர் காந்தராஜ் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். சாதி தொடர்பாக பாலச்சந்தர் பற்றி கங்கை அமரன் அடித்த கமெண்ட் பாலச்சந்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை அவர் வெளியே கட்டிக்கொள்ளவில்லை. அதன்பின்னரும் சில படங்களில் ஒருவரும் ஒன்றாக வேலை செய்தனர். ஆனால், ரஹ்மானை அறிமுகம் செய்து பாலச்சந்தர் தான் யார் என காட்டிவிட்டார்’ என காந்தராஜ் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்து பேசிய மாரிமுத்துவை பந்தாடிய ராஜ்கிரண் – இளையராஜா மேல் இப்படி ஒரு பாசமா?