Categories: Cinema News latest news

நீ கமல் ஆளா? அவர் கூத்தடிச்சத சொன்னா என்ன ஆகும் தெரியுமா? நிருபரை பங்கம் பண்ணிய கங்கை அமரன்

Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இப்போது அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார். யாருடன் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதையும் தாண்டி சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படத்தின் வேலைகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்துக் கொண்டு வருகிறார். இந்தியன் 2 படம் கண்டிப்பாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் கமலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். அந்த பேட்டியில் அவர் எழுதிய பாடல்வரிகள், இசையமைத்த டியூன் போன்றவைகளை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் கங்கை அமரன்.

அப்போது கமலும் சிறந்த இலக்கியவாதி என்றும் நான் பாடல் எழுதும் போது சில கருத்துக்களை சொல்வார் என்றும் கூறினார். ஆனால் மீட்டிங்கில் பேசும் போதுதான் யாருக்கும் புரியாத வகையில் பேசி சென்று விடுகிறார் என கங்கை அமரன் கூறினார்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு… கோபியை இனி யார் காப்பாத்துவா? பேச்சா பேசுனீங்க…

இதை சொன்னதும் கேள்வி கேட்ட நிருபர் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இருந்தார். உடனே கங்கை அமரன் ‘இதை சொன்னால் சிரிக்க வேண்டும். நீ கமல் ஆளா? நான் மட்டுமில்லை. எனக்கு தெரிந்தவர் பல பேர் கமல் பேசுவதே புரியவில்லை என்றுதான் கூறுகிறார்கள்’ என கங்கை அமரன் கூறினார்.

ஆனாலும் அந்த நிருபரை விட்டபாடில்லை. நீ கமல் ஆளா இருந்தாலும் பரவாயில்லை. நானும் கமல், ரஜினி எல்லாரும் சேர்ந்து அடித்த கூத்தை கேட்டால் A சர்டிஃபிக்கேட்தான். அந்தளவுக்கு இருந்திருக்கோம் என்று கங்கை அமரன் கூறினார்.

இதையும் படிங்க:நெப்போலியன் வில்லனாக மிரட்டிய படங்கள்! எஜமானையே ஆட்டிப்படைத்த வல்லவராயனை மறக்க முடியுமா?

Published by
Rohini