டைட்டில் கார்டில் கங்கை அமரனை கலாய்த்த பாக்கியராஜ்.. ஆனாலும் இவ்வளவு குறும்பு ஆகாது!..
1977-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார் பாக்கியராஜ். பின்னர் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருப்பார்.
பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான். தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவும் அறிமுகம் செய்தார்.
மௌன கீதங்கள் கே. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் பாக்கியராஜ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ”மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா” மற்றும் ”டேடி டேடி ஓ மை டேடி” என இரு பாடல்களும் மாபெரும் வெற்றி படலாக அமைந்து படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது. இந்த படத்திற்கு இசை அமைத்தது இளையராஜா என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இசை அமைத்தது இளையராஜாவின் உடன்பிறந்த சகோதரரான கங்கை அமரன்தான் .
இப்படத்தின் டைட்டில் கார்டில் பாக்கியராஜ் தனது குறும்புத்தனத்தை காட்டிருப்பார். அதில் இசைஞானி இளையராஜா பாட்டிற்கு டியூன் நோட்ஸ் எழுதுவது போலும் அதில் டியூன் செட் ஆகாமல் நிராகரிப்பதும். பின்னாடி இருந்து வந்து கங்கை அமரன் அதை திருடி சென்று இசைக் கலைஞர்களிடம் கொடுத்து இசையமைப்பது போலவும் காட்டப்பட்டிருக்கும். அப்போது டைட்டில் கார்டில் இசை கங்கை அமரன் என்று வரும். இதை திரைக்கதையாக கார்ட்டூன் வடிவில் அமைத்திருப்பார். இதை பாக்கியராஜ் கங்கை அமரனிடம் அனுமதி பெற்ற பின்னரே படத்தில் இடம் பெற செய்ததாக கூறினார்.
இதையும் படிங்க: ஏவிஎம் படத்தில் நடிக்க விநோதமான கன்டிஷனை போட்ட சிவாஜியின் தம்பி.. ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை…