வாய்ப்பு கொடுத்த கங்கை அமரனை அசிங்கப்படுத்திய கவுண்டமணி!.. மனுஷன் ரொம்ப கறார்தான்!...
திரையுலகில் காமெடி நடிகராக பல வருடங்கள் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர் கவுண்டமணி. நாடகங்களில் நடித்து வந்த அவர் பாக்கியராஜ் போன்றவர்கள் உதவிகளை பெற்று சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஹீரோ, நகைச்சுவை நடிகர், குணச்சித்திரம், வில்லன் என பல படங்களில் நடித்தவர். செந்திலும் இவர் இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இவர்களுக்காகவே படங்கள் ஓடிய காலம் கூட வந்தது. சத்தியராஜ், பிரபு, கார்த்தி, சரத்குமார் என பலரின் படங்களில் இரண்டாவது ஹீரோவை போலவே நடிக்கும் அளவுக்கு கவுண்டமணி உயர்ந்தார். அதேநேரம் திரையுலககை பொறுத்தவரை தங்களுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் தனக்கு உதவி செய்பவர்களை எல்லோரும் நினைத்து பார்க்க மாட்டார்கள். தனக்கு உதவியரிடமே கூட சம்பள விஷயத்தில் கறாராக இருப்பார்கள்.
ஒரு கட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நான் நடிப்பேன் எனக்கூறி அடம்பிடித்த கவுண்டமணி காமெடி செய்ய வந்த வாய்ப்புகள் எல்லாவற்றையும் மறுத்தார். அப்போது அவரை தேடிச்சென்று அவரது எண்ணத்தை மாற்றி கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க வைத்தவர் கங்கை அமரன்தான். அந்த படத்தின் மாபெரும் வெற்றி கவுண்டமணியை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து பல படங்களிலும் நடித்து பிஸியான நடிகராக மாறினார்.
அதே கங்கை அமரன் சில வருடங்கள் கழித்து இயக்கிய ‘கோவில் காளை’ படத்திலும் கவுண்டமணி நடித்தார். இந்த படம் எடுத்துகொண்டிருந்த போது தயாரிப்பாளருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, தனக்கு சம்பளம் வருமோ வராதோ என நினைத்த கவுண்டமணி தனது முழு சம்பளத்தையும் கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேச வருவேன் என தயாரிப்பாளரிடம் கறாராக சொல்லிவிட்டாராம். தயாரிப்பாளர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த பணத்தை தயார் செய்து கொடுத்த பின்னரே கவுண்டமணி டப்பிங் பேச வந்தாரம்.
இந்த தகவலை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கங்கை அமரன் ‘கவுண்டமணிக்கு பல படங்களில் நான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். ஆனால், அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் என்னை அவமானப்படுத்திவிட்டார்’ என வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
சினிமாவில் இதெல்லாம் சகஜம் பாஸ்!...