Cinema History
கரகாட்டக்காரன் மாதிரி வரும்னு நினைச்சேன்.. ஆனா படம் ஓடல… கங்கை அமரனுக்கு ப்ளாப் கொடுத்த படம்!..
தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் கங்கை அமரன். இளையராஜாவின் தம்பியான இவர் இளையராஜாவிற்கு உதவியாளராக தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
அப்போது இளையராஜாவிற்கு அதிக பட வாய்ப்புகள் வந்ததால் அதற்கு இசையமைப்பதற்கு கங்கை அமரனும் உதவினார். அதே போல நிறைய பாடல்களுக்கு வரிகளும் எழுதி கொடுத்தார். பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பதே ஆரம்பத்தில் கங்கை அமரனின் ஆசையாக இருந்தது. இதற்காக கவிஞர் வாலியிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.
ஆனால் வாலி அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்த நிலையில் படத்தை இயக்கலாம் என முடிவெடுத்தார் கங்கை அமரன். அவர் இயக்கிய திரைப்படத்திலேயே பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் கரகாட்டக்காரன். அந்த படம் அவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கவில்லை என தனது பேட்டியில் சாதரணமாக கூறுகிறார் கங்கை அமரன்.
தோல்வி கொடுத்த படம்:
அப்போது ரஜினி கமல் படங்களே 100 நாட்கள்தான் ஓடி சாதனை படைக்கும். ஆனால் கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. அதனை அடுத்து பல படங்களை இயக்கினார் கங்கை அமரன். ஆனால் பெரும் ஹிட் கொடுக்கும் என அவர் எதிர்பார்த்து இயக்கிய திரைப்படம் அண்ணனுக்கு ஜே.
இந்த படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தின் தோல்வி குறித்து கங்கை அமரன் கூறும்போது, படத்தில் கதாநாயகனை கிராமத்தை சேர்ந்த ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக வைத்தேன். அது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால் படம் ஓடவில்லை என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 2 நாளுக்குள்ள நாய்க்குட்டியோட டெல்லில இருக்கணும்!.. எஸ்.ஜே சூர்யாவுக்கு கொடுத்த டாஸ்க்…