
Cinema News
கமல் பண்ணுவார்…மத்த யாரும் பண்ண மாட்டாங்க….! நடிகர்களுக்கு சவால் விட்ட கங்கை அமரன்…
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர் கங்கை அமரன்.அது போக பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பிரபலமானார். இசைஞானி இளையராஜாவின் தம்பியும் ஆவார்.ஏகப்பட்ட சினிமா பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
பாடல்களும் பாடியுள்ளார். தற்போது பா.ஜ.க. கட்சியின் ஆதரவாளராக இருந்து வருகிறார். 2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்; ஆனால் அந்த இடைத்தேர்தல் ஆனது ரத்து செய்யப்பட்டது. பா.ஜ.க. கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். முதன் முதலில் கோழி கூவுது படத்தில் இயக்குநராக அறிமுகமானார். மேலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிய கரகாட்டக்காரன் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். தெம்மாங்கு பாட்டுக்காரன் இயக்குனராக பணியாற்றிய இவரது கடைசி படம்.
தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்தில் முதன் முதலின் ஒரு நடிகரை டூபீஸாக காட்டிய படம் இதுவே ஆகும். இந்த படத்தில் நடிகர் ராமராஜன் நடித்திருப்பார். அதில் பனியன் டிரௌசருடன் தான் படம் முழுக்க ராமராஜன் நடித்திருப்பார். இதை ஒரு மேடையில் அவரிடம் கூறிய போது கங்கை அமரன் இப்ப உள்ள நடிகர்களை அந்த மாதிரி நடிக்க சொல்லுங்கள் பார்ப்போம், யாரும் நடிக்க மாட்டாங்க.
ஆனால் நான் நடிக்க வைத்தேன். மேலும் கமல் நடிப்பார்.அவரெல்லாம் வேற மாதிரி. அவர் மட்டும் நடிப்பார்.மற்றவர்கள் யாரும் நடிக்க மாட்டாங்க என்று கூறினார். அப்படி பார்த்தால் முதல்வன் படத்தில் அர்ஜூன் ஒரு சீனில் நடித்திருப்பார். சேது படத்தில் விக்ரம் அந்த ஜெயிலில் மொட்டை தலையுடன் டிரௌசரில் தான் இருப்பார். இந்த கால நடிகர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் தான் வருகிறார்கள்.என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயாராகத்தான் இருக்கிறார்கள். இவர் ஏதோ 2-3 படங்கள் ஹிட் கொடுத்த நினைப்பில் பேசுகிறார் என திரைவட்டாரங்கள் கூறுகின்றனர்.