Connect with us
gangai-amaran78

Cinema History

சினிமாவின் அனைத்திலும் கொடிகட்டி பறந்த கங்கை அமரன்

தமிழ் சினிமா கலைஞர்களில் பல்வேறு பரிமாணங்களை உடையவர். திரு கங்கை அமரன் அவர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த கலைஞர் .

gangai-amaran78

 

அவரின் சினிமா சம்பந்தப்பட்ட விசயங்கள் தவிர்த்து அவரின் பேட்டிகள் எல்லாமே கலகலப்பாக இருக்கும். எதிலும் முகம் சுண்டி பேசி பேசமாட்டார் சமீபத்தில் எஸ்.பி.பி இறந்த போது மட்டுமே அவரின் சோக முகத்தைபலர்  பார்த்திருக்கலாம்
16 வயதினிலே இவர் எழுதிய செந்தூரப்பூவே என்று உலகில் இல்லாத ஒரு பூவை பற்றி கவி எழுதி அந்த பாடலை ஹிட் ஆக்கிய இவரின் லாவகத்தை சொல்ல வார்த்தை இல்லை.

gangai-amaran-3

பொன்னும் பொருள் போகும் வரும் அன்பு மட்டும் போவதில்லே தேடும் பணம் ஓடி விடும் தெய்வம் விட்டு போவதில்லே என்று இவர் தர்மதுரை படத்தில் எழுதிய தத்துவ வரிகள் பலர் மனதை கவர்ந்தவை .இன்னும் நூறு வருடம் கழித்து கூட ஆட்டோவின் பின்னால் எழுதலாம். கண்ணதாசனின் தத்துவ பாடல் வரிகளால் கவரப்பட்டு பாட்டெழுத வந்தவர் கங்கை அமரன்

கரகாட்டக்காரன் தில்லானா மோகனாம்பாளின் மிக்ஸிங்தான் என்றாலும் அதில் சுவையூட்ட திரைக்கதையில் நிறைய சுவாரஸ்யங்களை சேர்த்தவர் இவர். இவரின் படங்கள் எல்லாம் கலகலப்புக்கு 100 சதவீதம் கியாரண்டி கொடுத்தவை.

gangai-amaran-2

இவரின் படங்களில் இவர் சில காட்சிகளில் சின்ன எண்ட்ரி கொடுத்திருப்பார். கலகலப்பான கரக்காட்டக்காரன் படத்தின் க்ளைமாக்ஸில் இந்த பொண்ணையும் இந்த பையனையும் பாக்குறப்ப சலங்க ஒலில வர்ற கமலஹாசனையும் ,ஜெயப்ரதாவையும் பார்த்த மாதிரியே இருக்குப்பா என க்ளைமாக்ஸில் காமெடி செய்து முடித்து வைப்பார், ஊரு விட்டு ஊரு வந்துவில் திரைப்படத்திலும் க்ளைமாக்ஸில் வந்து படத்தை முடித்து வைப்பார்.

வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் இவர்தான் இளையராஜா என நினைத்து செந்தில் இவருடன் மோதும் சில நிமிட காட்சிகள் அருமையாக இருக்கும்.
இயக்கம் மட்டுமல்லாமல், பாடல்ஆசிரியர் , பாடகர், நடிகர், என பல்வேறு வேடம் பூண்டு எல்லாவற்றிலும் சோடை போகாமல் அனைத்தையும் சிறப்பாகவே கையாண்டுள்ளார்.

gangai-amaran-1

சினிமாவை பல வருடமாகவே கவனித்து வருபவர்களுக்கு தெரியும். ஒவ்வொரு நேரத்திலும் கங்கை அமரனின் கெட் அப் வித்தியாசமாக இருக்கும். கடுமையான பஞ்சுத்தலை போல வெள்ளை முடியுடன் காட்சி அளிப்பார், திடீரென முழுவதும் டை அடித்து கருகருவென காட்சி அளிப்பார், மீசையுடனும், மீசை இல்லாமலும் பல வருடங்களாக பல விழாக்களில் வெவ்வேறு கெட் அப்களில் காட்சி அளிப்பார் இவர்.

அண்ணன் இளையராஜா திருவண்ணாமலை ரமணர் பக்தர் என்றால் இவர் பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னை பக்தர் அவரை போற்றி பாடல்கள் பாடி இசையமைத்து அந்த பாடலும் ஹிட் ஆகியுள்ளது

வாழ்வே மாயம், சின்னத்தம்பி பெரிய தம்பி, ஜீவா, , பிள்ளைக்காக உள்ளிட்ட பல படங்களில் இவரின் இசை பலருக்கும் பிடித்த விசயம். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா லாக் டவுனில் வீட்டில் இருந்தபோது கங்கை அமரனும், எஸ்.பிபியும் வீடியோ காலில் பேசிக்கொண்டனர் அப்போது, கங்கை அமரனை பார்த்த உடனே நீலவான ஓடையில் பாடலை உணர்ச்சிகரமாக எஸ்.பி.பி பாடினார் அப்போது நான் வரைந்த பாடல்கள் என்ற வரியை நீ வரைந்த பாடல்கள் என கங்கை அமரனுக்காக மாற்றி பாடினார். திரைப்படத்தில் கங்கை அமரன் பல பாடல்கள் மிக ஆழமானவை அர்த்தமானவை என்றால் மிகையாகாது.

இளையராஜாவின் தம்பியாக இருந்தாலும் ஒரே இசைப்பாதையில் மட்டுமல்லாமல் தனக்கென்று தனித்திறமையை வளர்த்துக்கொண்டவர் மிகச்சிறந்த சினிமாக்கலைஞர் கங்கை அமரன்.

இவர் பிரபல இதழான நக்கீரனில்  பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் என்ற தொடர் எழுதினார் அந்த தொடர் சுவாரஸ்யமானது மிக சுவையானது. தனது திரையுலக அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து அந்த தொடரில் சுவாரஸ்யமாக கூறி இருந்தார் இவர்.

திரையுலகின் அஷ்டாவதானி என டி.ராஜேந்தரை சொல்வார்கள் ஏனென்றால் எல்லா வேலையையும் செய்பவர்களைத்தான் அப்படி சொல்வார்கள். கங்கை அமரன் ஒளிப்பதிவு மட்டும் செய்தது இல்லை மற்றபடி டல்,இசை இயக்கம், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இளையராஜா பிஸியாக இசையமைத்து கொண்டிருந்த காலத்தில் இளையராஜா கம்போஸ் செய்து கொடுத்த இசைக்குறிப்புகளை வைத்து, இளையராஜாவின் இசைக்கலைஞர்களை வைத்து அந்த குறிப்புக்கேற்ப பாடல்களை ஸ்டுடியோவில் இசைக்க வைத்து  கங்கை அமரன் தான் குறிப்பிட்ட பணிகளை இளையராஜாவின் கட்டளைக்கேற்ப செய்து கொடுப்பார்.

சின்னத்தம்பி பெரிய தம்பி படத்தில் இடம்பெற்ற ஒரு காதல் என்பது பாடல் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்ததால் அந்த பாடலும் கங்கை அமரன் இசைத்தது என பேசப்பட்டது. தம்பிக்காக அண்ணன் இளையராஜா இசைத்து கொடுத்த பாடல் அது அதை அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

பிள்ளைக்காக படத்தில் வரும் மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன், ஜீவா படத்தில் வரும் ஹீரோ வந்தாச்சுடி, சங்கீதம் கேளு, வாழ்வே மாயம் படத்தில் வரும் நீலவான ஓடையில், இன்னும் எண்ணற்ற பாடல்கள் கங்கை அமரனின் இசையில் ஹிட் ஆகியுள்ளன.

எங்க ஊரு ராசாத்தி படத்தில் வரும் பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் என்ற பாடல் கங்கை அமரன் இசைத்தது என்றாலும் படகோட்டி படத்தில் வரும் பாட்டுக்கு பாட்டெடுத்து என்ற பாடலின் வடிவம் தான் அது என கங்கை அமரன் பல மேடைகளில் கூறி இருக்கிறார்.

கங்கை அமரன் இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள்தான் காரணம் நகைச்சுவையோடு காட்சிகள் அமைத்து அதற்கு திரைக்கதை அமைப்பதுதான் கங்கை அமரன் பாணி.

இவரின் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன்,கும்பக்கரை தங்கய்யா, சின்னவர்,வில்லுப்பாட்டுக்காரன், என பல படங்களில் திரைக்கதையில் கலக்கி இருப்பார் ஆழமான கதையும் அதற்கேற்றவாறு கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் 50 சதவீதம் நகைச்சுவை காட்சிகளும் சரி சமமாய் இருப்பது போல காட்சிகளை வைத்திருப்பார் அதனால்தான் இவர் இயக்கிய படங்கள் இன்றும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும்.

திரையுலகில் கங்கை அமரனின் பாடல் வரிகளையும், இயக்கத்தையும், இசையையும் பற்றி எழுதிக்கொண்டே செல்லலாம். சகோதரர்களோடு வாய்ப்பு தேடி வந்தாலும், தனக்கு இசை மட்டும் வராது தனக்கு இயக்கம் பாடலும் நல்லா வரும் என மற்ற துறையிலும் ஈடுபாடு காட்டி வெற்றிக்கொடி நாட்டியவர் கங்கை அமரன்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top