அந்த ரஜினி படத்துக்கு இளையராஜா மியூசிக் போடல.. உண்மையை உடைத்த கங்கை அமரன்

Published On: June 11, 2023
| Posted By : Rajkumar

இளையராஜா சினிமாவிற்கு இசையமைத்தவந்த ஆரம்ப காலகட்டம் முதலே அவருடன் கூட இருந்து பணிபுரிந்து வருபவர் இசையமைப்பாளர் கங்கை அமரன்.

இளையராஜாவுக்கு இசையமைப்பு மட்டுமே தெரியும். ஆனால் கங்கை அமரன் இசையமைப்பது, படங்களை இயக்குவது, படங்களுக்கு பாடல் வரிகள் எழுதுவது என பன்முகத் திறமைகளை கொண்டிருந்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் அப்போது தமிழ் சினிமாவிலேயே யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை கொடுத்தது.

இளையராஜா அதிக வாய்ப்புகளை பெற்று வந்த சமயத்தில் இளையராஜாவாலையே இசையமைக்க முடியாத அளவிற்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. அந்த சமயத்தில் பல படங்களுக்கு கங்கை அமரனும் இணைந்து பாடல்கள் இசைத்துள்ளார்.

கங்கை அமரன் இசையமைத்த  படம்:

ஒரு பேட்டியில் கங்கை அமரன் கூறும் பொழுது இளையராஜா இசையமைத்ததாக நீங்கள் நினைக்கும் பல பாடல்கள் நான் இசையமைத்தவை. வெளியில் பலருக்கும் இந்த விஷயம் தெரியாது. அப்போதெல்லாம் அண்ணன் எங்காவது வெளியூருக்கு சென்றிருந்தால் இங்கு வரும் படங்களுக்கு நான்தான் இசையமைத்து தருவேன்.

நான் தனியாக இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பு அதிக இளையராஜா பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். அந்த ஞானம்தான் என்னை ஒரு இசையமைப்பாளராக ஆக்கியது. உதாரணமாக ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களுக்கும் நான்தான் இசையமைத்தேன். ஆனால் அந்த படத்தில் இளையராஜா என்று தான் வரும் இந்த மாதிரி எக்கச்சக்கமான படங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளியில் சொல்வது தப்பு என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.