எம்.எஸ்.வியிடமிருந்து காப்பி அடித்த கங்கை அமரன்… ஆனால் பாடல் செம ஹிட்… என்ன பாடல்ன்னு தெரிஞ்சா அசந்திடுவீங்க…

இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் தமிழில் “கோழிக் கூவுது”, “கரகாட்டக்காரன்”, “வில்லுப்பாட்டுக்காரன்” போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியவர். மேலும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். அவரது இசையில் பல பாடல்கள் ஹிட் அடித்திருக்கின்றன. ஆனால் அந்த பாடல்களை ரசிகர்கள் பலரும் இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் என்றே நினைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு கமல்ஹாசனிந் “வாழ்வே மாயம்” திரைப்படத்திற்கு கங்கை அமரன்தான் இசையமைத்திருந்தார். அத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட். ஆனால் அப்பாடல்களை இளையராஜாதான் இசையமைத்தார் என்று ரசிகர்கள் நினைத்திருப்பார்கள்.

அந்த வகையில் கங்கை அமரன் இசையமைத்த பாடல்தான் “பொன்மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்” என்ற பாடல். இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் “எங்க ஊர் ராசாத்தி”. இப்பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுத மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா ஆகியோர் இப்பாடலை பாடியிருந்தனர். இப்பாடல் இப்போதும் மிகப் பிரபலமான பாடலாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கங்கை அமரன், இப்பாடலை எம்.எஸ்.வியின் பிரபலமான பாடலில் இருந்து கொஞ்சம் உருவி உருவாக்கப்பட்ட பாடல் என்று மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதாவது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “படகோட்டி” படத்தில் இடம்பெற்ற “பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ” என்ற பாடலை போலவே ஒரு Feel கொடுக்கும் ஒரு பாடலை கம்போஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் கூற, அதற்கு கங்கை அமரன், “அதே மாதிரி எதுக்கு பண்ணனும்? அதையே கொஞ்சம் மாத்தி பண்ணிடலாமே” என்று கூறினாராம். அதன் பின் அந்த எம்.எஸ்.வியின் பாடலின் ராகத்தை கொஞ்சம் மாற்றி “பொன்மானைத் தேடி” பாடலை உருவாக்கினாராம் கங்கை அமரன். எனினும் அப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த வசனத்தை பேசமாட்டேன்- ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் செய்த ரஜினிகாந்த்… அப்படி என்னவா இருக்கும்!

 

Related Articles

Next Story