ராஜா மியூசிக் போட்ட முதல் பாடல் அதுதான்!.. யாருக்குமே தெரியாது!.. பலவருட ரகசியத்தை சொன்ன கங்கை அமரன்..
தமிழ் சினிமாவில் இசை ராஜாங்கத்தையே நடத்தியவர் இசைஞானி இளையராஜா. 70களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்களுக்கும் மேல் கொடிகட்டி பறந்தவர். இளையராஜாவின் இசையை நம்பியே பல படங்களும் உருவானது. பல மொக்கை படங்களை கூட தனது பாடல்களால் ஓடவைத்தவர் இவர். அவருக்கு பின்னர் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்த பிறகும் பின்னணி இசைக்கு இப்போதுவரை ராஜாவை அடித்துகொள்ள ஆள் இல்லை என்பதே நிஜம்.
இளையராஜா இசையமைக்கிறார் என்று தெரிந்தாலே அந்த படம் வியாபாரம் ஆகிவிடும். அவர் வந்த பிறகுதான் ஆடியோ கேசட்டுகளும் அதிகம் விற்க துவங்கியது. பட்டிதொட்டியெங்கும் அவரின் பாடல்கள் ஒலிபரப்பாகி வந்தது. ஏனெனில், மன் வாசணை மிக்க பாடல்களை கொடுத்தவர்.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவரும் ராஜாவுடன் சென்னை வந்து வாய்ப்பு தேடியவர். இளையராஜா இசையமைக்க துவங்கிய பின் அவரின் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார். சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். சில படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். இவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் வருடக்கணக்கில் ஓடியது. ஆனால், ராஜாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் அவருடன் பல வருடங்கள் சுமுகமான உறவில் அவர் இல்லை.
இதையும் படிங்க: சினிமாவால் மொட்டை ராஜேந்திரன் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் – விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பரிதாபம்!!
சமீபத்தில் ஒருவிழாவில் பேசிய கங்கை அமரன் ‘எங்கள் குடும்பத்தில் இளையராஜா மட்டுமே இசையமைக்க வேண்டும் என நாங்கள் முடிவெடுத்தோம். நான் பாடல் எழுத வேண்டும் என நினைத்தேன். அப்போது வரும் சினிமா போஸ்டர்களில் இசை எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள் கண்ணதாசன் என வரும். அதுபோல இசை இளையராஜா, பாடல்கள் கங்கை அமரன் என வரவேண்டும் என அடிக்கடி பேசுவோம். நான் சில பாடல் வரிகளை எழுதி இளையராஜாவை இசையமைக்க சொல்வேன். அவருக்கு முன்னே நான் பாடல்களை எழுதிவிட்டேன். ஜவஹர்லால் இறந்தபோது அவருக்காக கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருந்தார். அதற்கு இளையராஜா ஒரு பாடல் அமைத்தார். அதுதான் ராஜா இசையமைத்த முதல் பாடல். இது பலருக்கும் தெரியாது’ என கங்கை அமரன் பேசினார்.
நேருவின் மறைவுக்கு பின் 12 வருடம் கழித்து அன்னக்கிளி படம் மூலம் இளையராஜா சினிமாவில் இசையமைக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவர்தான் கோலிவுட்டின் அடுத்த விஜயகாந்த்! நடிகரின் செயலால் ஆடிப்போன தயாரிப்பாளர்