அது வேற வாய். இது வேற வாய்!.. இளையராஜாவை கிழித்து தொங்கவிட்ட கங்கை அமரன்!…

Ilayaraja: கடந்த சில நாட்களாகவே இளையராஜா தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பும் விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. தன்னிடம் முறையாக அனுமதி பெறாமல் யாராவது திரைப்படங்களில் பயன்படுத்தினால் அவர்களுக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார். அவர்தான் சம்பளம் வாங்கிவிட்டாரே.. காசு வாங்கி கொண்டுதானே பாடல்களுக்கு இசையமைத்தார். அதன்பின் அந்த பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்.
அவர் அதை ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்றுவிட்டால் பாடல்களின் உரிமை அந்த நிறுவனத்திடமே இருக்கும் என பொதுவாக பலரும் சொல்வதுண்டு. அதோடு, இளையராஜாவுக்கு காசு ஆசை என்றெல்லாம் அவரை பிடிக்காதவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இளையராஜா இசையமைத்த கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியிருந்தார்கள். அதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பினார்.
அப்போதும் அவரை சிலர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இப்போது சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய 3 பாடல்களை படக்குழு பயன்படுத்தியிருந்ததற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். ‘இளைராஜாவிடம் இல்லாத பணமா?.. அவரின் பாடல்களை அனுமதி வாங்கி பயன்படுத்த வேண்டும் என ராஜா நினைக்கிறார். இதை செய்வதில் என்ன பிரச்சனை?’ என சிலர் கேட்கிறார்கள்.

இந்நிலையில், ஒருவிழாவில் பேசிய கங்கை அமரன் ‘நீங்கள் இசையமைப்பாளருக்கு 7 கோடி சம்பளம் கொடுத்து வாங்கும் பாடல் ஹிட் ஆகவில்லை. ஆனால், எங்கள் பாட்டு ஹிட் அடிக்கிறது. அதனால் அண்ணன் பணம் கேட்கிறார். அனுமதி வாங்கி பயன்படுத்த வேண்டும் என அண்ணன் எதிர்பார்க்கிறார். அப்படி செய்யாமல் போகும்போது அவர் நோட்டீஸ் அனுப்புகிறார். காசு ஆசையெல்லாம் எங்களுக்கு இல்லை. செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் இருக்கு. எங்கள் பாட்டை வைத்து படங்களை ஹிட் ஆக்குகிறீர்கள். அதற்கு எங்களுக்கு கூலி கொடுக்க மாட்டீர்களா?’ என பேசியிருந்தார்.
ஆனால், இதே கங்கை அமரன் ஒரு வருடத்திற்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசியபோது காப்புரிமை தொடர்பாக இளையராஜாவை கடுமையாக விமர்சித்தார். அண்ணன் செய்வது அசிங்கம். கேவலம்.. எத்தனையோ எம்.எஸ்.வி. பாடல்களை சுட்டு அண்ணன் பாட்டு போட்டிருக்கிறார். தியாகராஜர் கீர்த்தனைகளை பயன்படுத்தி இருக்கிறார். இதற்கெல்லாம் அவர் பணம் கொடுத்தரா?. நீ சாப்பிடுவது 2 இட்லி, கொஞ்சம் சாப்பாடு இல்லனா ரெண்டு சப்பாத்தி. அப்படி இதுல காசு வாங்கி நீ அப்படி என்ன சம்பாதிக்கப்போற?’ என பொங்கியிருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் சிலர் பகிர்ந்து அது வேற நாய். இது நார வாய். என பதிவிட்டு வருகிறார்கள்.