"7 கோடி வாங்குன மியூசிக் டைரக்டரால ஹிட் கொடுக்க முடியல.." - ஜிவியை சல்லி சல்லியா நொறுக்கிய கங்கை அமரன்!

by Giri |
7 கோடி வாங்குன மியூசிக் டைரக்டரால ஹிட் கொடுக்க முடியல.. - ஜிவியை சல்லி சல்லியா நொறுக்கிய கங்கை அமரன்!
X

இளையராஜா தனது பாடல்களை "குட் பேட் அக்லி" படத்தில் பயன்படுத்தியதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவரின் சகோதரரும் இயக்குநருமான கங்கை அமரன் இந்த விவகாரத்தைப் பற்றி பேசியிருக்கிறார். தனது பேச்சில் கங்கை அமரன் மறைமுகமாக ஜிவி பிரகாஷை சல்லி சல்லியாக நொறுக்கியிருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், "இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்பது சரியானது.

நாங்கள் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி வருகிறோம், இந்தியாவிலும் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளை பிரபல இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் கொண்டு வந்தார். இது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கதை எழுதியவருக்கு எத்தனை மொழிகளில் கதை சென்றாலும் உரிமை உண்டு, ஆனால் பாடல்களுக்கு உரிமை இல்லை என்பது தவறு.

முதலில் நாங்கள் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தோம். அவர்கள் படத்தின் பூஜையன்று பத்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். ஆனால், அன்னக்கிளி, பத்ரகாளி போன்ற படங்களின் கேசட்டுகள் அதிகமாக விற்றாலும், அதிலிருந்து எங்களுக்கு பணம் வரவில்லை. இது நாங்கள் அப்போதுதான் அறிந்தோம். பின்னர் என் அண்ணன் எந்தப் படமானாலும் இசை உரிமையை வாங்கிக் கொள்வார். இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி மேடையில் பாடுவதற்கு தடை விதித்த நிலையில், நான் அவரிடம் சண்டை போட்டேன். பின்னர் அவர் மேடைகளில் தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு தடை போடவில்லை.

GV Prakash
GV Prakash

7 கோடி ரூபாய்க்கு நீங்கள் ஒரு இசையமைப்பாளரை வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடல்களுக்கு கைதட்டு வராமல் நமது பாடல்களுக்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அப்படியிருக்க, அதற்கான கூலி நமக்குதான் வர வேண்டும் அல்லவா? எங்களுடைய பெயரை போடாமல் மற்றொரு இசையமைப்பாளருக்கு கோடிகள் கொடுத்தும் அவர் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை.

அப்படியானால் நாங்களும் அதில் பங்கு பெறவேண்டியது தான். நீங்கள் அனுமதி கேட்டிருந்தால், நிச்சயமாக இளையராஜா இலவசமாகவே கொடுத்திருப்பார். அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதால்தான் அவர் கோபம் கொள்கிறார். இதில் இளையராஜாவுக்கு பணத்தாசை கிடையாது; நாங்கள் பணத்தை எப்படி செலவு செய்வது என யோசித்து வருகிறோம்.

அஜித் படம் என்றெல்லாம் சொல்கிறார்கள்; அது எங்களுக்குத் தெரியாது. அது எங்களுடைய பாடல், அதுதான் முக்கியம். உங்களின் இசையமைப்பாளரை வைத்து அப்படியான இசையை கொடுக்க முடியவில்லை; எங்களுடைய பாடல்கள் தான் படத்தை வெற்றிக்கு கொண்டு வந்தது. முன்பே அனுமதி கேட்டிருந்தால், நாங்கள் மகிழ்ச்சியாக கொடுத்திருப்போம். அனுமதி இல்லாமல் எங்களுடைய சொத்தை எப்படி பயன்படுத்த முடியும். அந்த கோபம்தான், வேறொன்றும் இல்லை."

Next Story