ஓகே சொன்ன தல தளபதி!. அந்த கதையை மட்டும் எடுத்திருந்தா!.. மிஸ் பண்ண வெங்கட் பிரபு...

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் இரண்டு பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பார்கள். பாலிவுட்டில் இது மிகவும் அதிகம். ஹீரோவாக நடிப்பவர் வில்லனாகவும், வில்லனாக நடிப்பவர் ஹீரோவாகவும் நடிப்பார்கள். கதையும், கதாபாத்திரங்களுமே முக்கியம். அதோடு, நடிப்பது நம் வேலை, நமக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதோடு அவர்கள் நிறுத்திக்கொள்வார்கள்.

ஆனால், கோலிவுட்டில் அப்படியில்லை. நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்.. என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. நான் வில்லனாக நடிக்க மாட்டேன், மற்றொரு மாஸ் நடிகருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என தமிழ் சினிமா ஹீரோக்கள் அடம் பிடிப்பார்கள். சினிமா துவங்கி பல வருடங்களாகியும் இது இன்னும் மாறவில்லை. அரிதாக அவ்வப்போது ஒவ்வொன்று நடக்கிறது அவ்வளவுதான்.

venkat

தமிழ் சினிமாவில் தற்போது டாப் இடத்தில் இருப்பவர்கள் அஜித்தும், விஜயும்தான். இவர்கள் இருவரும் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த போது ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின், இருவரும் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்தனர். ஆனால், அப்படத்திலிருந்து அஜித் விலக அவருக்கு பதில் சூர்யா நடித்தார். அதன்பின் பல வருடங்களாகியும் அஜித்தும், விஜயும் இணைந்து நடிக்கவில்லை. இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்பதில் உறுதியாகவும் உள்ளனர்.

ajith vijay

மங்காத்தா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த விஜய் அஜித்தை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களை கூகுளில் பார்க்கலாம். அப்போது மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு ‘உங்கள் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன்’ எனக்கூற ‘அதுக்கென்ன.. நல்ல கதையா இருந்தா நடிப்போம்’ என இருவரும் கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தை வெங்கட்பிரபு தனது அப்பா கங்கை அமரனிடம் சொல்ல அவர் பொன்னியின் செல்வன் கதையை படி. அதில், வந்திய தேவன் கதாபத்திரத்தில் விஜயையும், அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் அஜித்தையும் யோசித்துப்பார். அதை முயற்சி செய் என கூறினாராம்.

பொன்னியின் செல்வன்

ஆனால், வெங்கட்பிரபு அதை செய்யவில்லை. ஒருவேளை வெங்கட்பிரபு பொன்னியின் செல்வன் கதையை கையில் எடுத்திருந்தால் ஒருவேளை, அஜித்தும், விஜயும் இணைந்து நடித்திருப்பார்களா என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: சிவாஜிக்கு ஜோடி சாவித்திரியா?? “சத்தியமா எங்களால பார்க்கமுடியாது”… வெறுப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்…

 

Related Articles

Next Story