
Cinema News
விஜய் மீது எரிச்சலாக உள்ளது… பொது மேடையில் தளபதியை திட்டிய கங்கை அமரன்
கோலிவுட்டில் சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர் என்ற பெயர் பெற்றவர் தான் நடிகர் விஜய். மிகவும் எளிமையான மனிதர் ரசிகர்களிடம் அன்பாக பழகும் குணமுடையவர் என்பதால் அனைவருக்கும் விஜயை பிடிக்கும். இவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பொது மேடை ஒன்றில் நடிகர் விஜயை திட்டி பேசியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சமீபத்தில் நடந்த முகமறியான் படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையில் பேசிய கங்கை அமரன் விஜய் குறித்து கூறியதாவது, “விஜய் அவருடைய அம்மா அப்பாவை ஒதுக்கிவைப்பது போன்று பேசியது எனக்கு மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியது. நாங்களெல்லாம் சந்திரசேகரின் நாடகத்திற்கு வாசித்தவர்கள்.
விஜய் பிறந்தபோது அவர் அம்மா எங்களது குரூப்பில் பாடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விஜயை அவர் தூக்கி கொண்டு வருவார். நாங்கள் எல்லாம் அவரை கொஞ்சுவோம். அவர்கள் விஜயை எப்படி வளர்த்தார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அப்படியிருக்கும் போது விஜய் இப்படி செய்வது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது.
அன்றைக்கு மறுநாளே நான் பத்திரிகைகளில் சொன்னேன். அம்மா அப்பாவை விலக்கி வைத்து வாழ்வது சரியாக இருக்காது. நிம்மதியாக வாழமுடியாது. அதனால் பெற்றோரிடம் சேர்ந்து வாழச்சொல்லி விஜய் ரசிகர்கள் அவரிடம் தயவு செய்து சொல்லுங்கள். . இது விஜய் ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள்” என கூறினார். அவர் நல்லது கூறியருந்தாலும் சிலர் இவரை விமர்சித்து வருகிறார்கள்.