Cinema News
வளரவளர வெட்டி விட்ட கதையா இருக்கே!.. வைரமுத்துவால் வாழ்க்கையை தொலைத்த கங்கை அமரன்
தமிழ் சினிமாவில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து சின்ன சின்ன பாடல்களை கச்சேரிகளுக்காக எழுதிக் கொண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் கங்கை அமரன். இவரைப் பற்றி கவிஞர் வாலியே பெருமையாக கூறியிருக்கிறார். 16வயதினிலே படத்தில் அமைந்த ‘செந்தூரப்பூவே’ பாடலை எழுதியதன் மூலம் தேசிய விருதை பெற்றார் கங்கை அமரன்.
கங்கை அமரன் பெரும்பாலும் பூக்களை மையப்படுத்தி அமைந்த பாடல்களையே எழுதக்கூடியவர். ஆனால் அந்த பெயரில் ஒரு பூ கூட இருக்காதாம். செந்தூரப்பூவே என்ற பெயரில் பூவே கிடையாதாம். ஆனால் அந்தப் பாடல் எப்பேற்பட்ட வரவேற்பை பெற்றது. அதே போல் தேன்மல்லிப் பூவே என்ற பாடலையும் எழுதியிருப்பார்.
இதையும் படிங்க : பட வாய்ப்புக்காக பல நாள் படுக்கையை பகிர்ந்தும் பிரயோஜனம் இல்லை!.. இயக்குநரால் நடிகை அப்செட்டாம்!..
ஆனால் அதிலும் பூ கிடையாதாம். இதை குறிப்பிட்டே கவிஞர் வாலி ‘அவன் என்னடா எல்லா பூ பெயரிலும் பாடலை எழுதிட்டான். இனி எந்த பூவை பற்றி நாம் எழுதுவது’ என்று நையாண்டி தொணியில் கூறினாராம். படிப்பறிவு கம்மிதான்.
ஆனால் அந்தளவுக்கு தமிழ் ஞானம் வாய்க்கப் பெற்றவராக இருந்தார் கங்கை அமரன்.அதற்கு காரணம் கடவுள் எனக்கு படைக்கப்பட்டது என்று ஒரு பேட்டியில் கூறினார் கங்கை அமரன். ஆனால் இளையராஜாவின் தம்பி என்றாலும் சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்தை கங்கை அமரனுக்கு பெற்றுத்தந்தது என்னமோ பாரதிராஜாதானாம்.
16 வயதினிலே படத்தால் வந்த புகழ்தான் கங்கை அமரனை ஊர் அறிய செய்தது. இதை பற்றி பேசும் போது கங்கை அமரன் ‘கவிஞர்களின் ஞானத்தோடு இருந்தாலும் எங்க என்ன வளர விட்டீங்க? வைரமுத்து வந்த பிறகு யாரும் என்ன கூப்பிடவே இல்லையே. பாரதிராஜாவையும் சேர்த்து தான் சொல்கிறேன். மேலும் வைரமுத்து வாண்டடா போய் வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருப்பார். மேலும் ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுத வேண்டும் என நினைப்பார். அது ஒன்றும் தவறில்லை, ஆனால் நானா போய் வாய்ப்பு கேட்க மாட்டேன்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : இனிமே நோ ரெஸ்ட்!.. கொலைவெறியில் கோடி கோடியா அள்ள கணக்கும் போடும் தனுஷ்…
அதன் பிறகு தான் இயக்குனர், இசையமப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகள் கொண்ட கலைஞராக மாறினார் கங்கை அமரன்.