கேங்கர்ஸ் படம் ஓடலன்னாலும் சுந்தர்.சிக்கு கிடைச்ச கிப்ட்!.. செம மேட்டரா இருக்கே!..

gangers
கோலிவுட்டில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. காதல் கலந்த காமெடி படங்களை எடுப்பதுதான் இவரின் ஸ்டைல். இதை மீறி அவர் எடுத்த சில படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறவில்லை. எனவே, காமெடி ரூட்டிலேயே பயணித்து வருகிறார். அரண்மனை படம் மூலம் ஹாரர் காமெடி வகை படங்களையும் இயக்க துவங்கினார்.
அதுவும் அவருக்கு கை கொடுத்தது. அரண்மனை 4 பாகங்களும் வெற்றி பெற்றது. ஒருபக்கம், இயக்குனராக மட்டுமில்லாமல் கடந்த 10 வருடங்களுக்கும் மேல் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அப்படி நடித்து வெளியானதில் 90 சதவீத படங்கள் வெற்றி படங்கள்தான். சினிமாவில் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி.
15 வருடங்களுக்கு பின் வடிவேலுவுடன் இணைந்து சுந்தர்.சி நடித்து உருவான கேங்கர்ஸ் படம் கடந்த 24ம் தேதி வெளியானது. சுந்தர்.சி இயக்கத்திலும் சரி, நடிக்கும் படங்களிலும் சரி.. வடிவேலுவின் காமெடிகள் செம ஹைலைட்டாக அமைந்து, வின்னர், கிரி, லண்டன், தலைநகரம், தலைநகர் மறுபக்கம் போன்ற படங்களில் இடம் பெற்ற காமெடிகள் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் வடிவேலு காமெடியாக இருக்கிறது.

அப்படி கேங்கர்ஸ் படமும் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் பாதியில் காமெடி வொர்க் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் மட்டும் ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். சுமார் 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 5 கோடியை கூட வசூல் செய்யவில்லை என்கிறார்கள். அதேநேரம், மற்ற மொழி உரிமை, சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமை போன்றவற்றில் தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கிடைத்திருக்கிறது.
ஒருபக்கம், விரைவில் 25வது வருட திருமண நாளை கொண்டாடவிருக்கிறார் சுந்தர்.சி. எனவே, கேங்கர்ஸ் பட தயாரிப்பாளர் ஐரோப்பிய நாடுகளை சுற்றிப்பார்க்க 25 நாட்களை கொண்ட ஒரு பேக்கேஜை புக் செய்து மே மாதம் ஜாலியாக போய் சுற்றி பார்த்துவிட்டு வாருங்கள் என சொல்லிவிட்டாராம். எனவே, சுந்தர்.சியும், குஷ்புவும் விரைவில் வெளிநாடு டூர் கிளம்புவார்கள் என்கிறார்கள்.
தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் அரண்மனை 5 படத்தை எடுக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார்.