மீண்டும் தலைநகரம் கூட்டணி… சும்மா தெறிக்க விடுதே… பரபரப்பாக்கும் கேங்கர்ஸ் டிரெய்லர்!...

by Akhilan |   ( Updated:2025-04-01 07:19:22  )
மீண்டும் தலைநகரம் கூட்டணி… சும்மா தெறிக்க விடுதே… பரபரப்பாக்கும் கேங்கர்ஸ் டிரெய்லர்!...
X

gangers

Gangers: பிரபல இயக்குனர் சுந்தர்.சியின் நடிப்பில் பல நாட்கள் கழித்து வெளியாக இருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது.

பொதுவாக சில இயக்குனர்களின் படங்கள் மட்டுமே ஹிட்டடிக்கும். அவர்கள் நடித்தால் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது. ஆனால் ஒரு சூப்பர்ஹிட் இயக்குனராக இருந்தாலும் நடிப்பிலும் பட்டையை கிளப்பி இருந்தவர் சுந்தர்.சி. அவரின் நடிப்பு கேரியரில் முக்கிய படம் தலைநகரம்.

அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் மாஸ் காம்போதான் காரணமாக இருந்தது. அதன் பின்னர் அப்படி ஒரு படத்தினை சுந்தர்.சியால் கொடுக்க முடியவில்லை. ஆனால் தற்போது இந்த தரமான கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கிறது.

Gangers

வடிவேலு, கேத்ரீன் தெரசாயுடன் இணைந்து சுந்தர்.சி நடித்து இயக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காமெடிகளால் டிரெய்லரே பட்டையை கிளப்பு ரகத்தில் அமைந்துள்ளது.

15 வருடம் கழித்து வடிவேலு மற்றும் சுந்தர்.சி காம்போவில் படம் தாறுமாறு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 24 முதல் இப்படம் தமிழகமெங்கும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சில காமெடி கூட்டணிக்கே படம் ஹிட்டடிக்கும். அப்படி ஒரு காம்போ இவர்கள் என்பதால் கேங்கர்ஸ் டிரெய்லர் ரசிகர்களிடம் செம வரவேற்பு பெற்று வருகிறது. பழைய வடிவேலுவாக கெட்டப்புகளும் நிறைய டிரெய்லரில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story