ஒரே சீரியல் ஓஹோனு வாழ்க்கை... விலையுயர்ந்த கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்....!
இன்றைய காலத்தில் வெள்ளித்திரை நடிகர்களைவிட சின்னத்திரை நடிகர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு எபிசோடுக்கே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி நாம் விஷயத்திற்கு வருவோம். சமீபகாலமாக பல சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் காஸ்ட்லி கார் வாங்கிய செய்திகளை நாம் பார்த்திருப்போம். தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கேப்ரில்லா தான்.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த கேப்ரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சிங்கிள் பசங்க, பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற கேப்ரில்லா தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கேப்ரில்லா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். இது குறித்து அவரது இன்ஸ்டாகிரம் பதிவில் கூறியிருப்பதாவது, "பல மாத யோசனைக்கு பின், புதிய காரை வாங்க நான் முடிவு செய்துள்ளேன். நான் டாடா ஹேரியர் டார்க் எடிசன் காரை முதல் காராக தேர்வு செய்து வாங்கியுள்ளேன்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது உங்களது அனைவரின் அன்பாலும் ஆதரவாலும்தான் சாத்தியமானது. இந்த பீஸ்ட் என்னைக் காக்க வந்திருக்கிறது. லவ் யூ ஆல்" என பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.