மகாராஜாவும், கருடனும் சேர்ந்து செய்த மெகா வசூல்!.. ஆத்தாடி இத்தனை கோடியா?!...
சினிமா மூலம் வரும் வருமானம் என்பது தியேட்டரில் ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மட்டுமல்ல. கார், பைக் பார்க்கிங் மற்றும் இடைவேளையில் கேண்டினில் வாங்கும் பாப்கார்ன், கூல்ட்ரிங்ஸ், தண்ணீர் பாட்டில் போன்ற ஸ்னேக்ஸ் விற்பனையும் சேர்த்துதான். இதிலும், சின்ன நகரங்களிலும், சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் விலை மாறுபாடும்.
சின்ன நகரங்களில் பைக் பார்க்கிங் 10 அல்லது 20 வாங்குவார்கள். சென்னையில் சில தியேட்டர்கள் 30 அல்லது 40 வாங்குவார்கள். அதுவே, மல்டிபிளக்ஸ் போன்ற பெரிய தியேட்டர்களுக்கு போனால் 3 மணி நேரம் பைக் நிறுத்தியதற்கே 100 ரூபா கொடுக்கவேண்டும். பைக்குக்கே அவ்வளவு எனில் காருக்கு 300ஐ தாண்டும்.
அதேபோல், 50 ரூபாய் பாப்கார்னை 200 ரூபாய்க்கும், 100 ரூபாய் பாப்கார்னை 400 ரூபாய்க்கும் விற்பார்கள். ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 50ஐ தாண்டும். மேலும், பப்ஸ், கேக் போன்ற ஸ்னேக்ஸ்களின் விலையும் தாறுமாறாக இருக்கும். பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்னையில் மல்டிபிளக்ஸ் போன்ற தியேட்டர்களில் குடும்பத்துடன் படம் பார்க்க முடியும்.
விஜய்சேதுபதியின் 50வது படமாக வெளிவந்தது மகாராஜா. தனது மகளை சீரழித்தவர்களை பழிவாங்க துடிக்கும் ஒரு தந்தையின் கதை. இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதோடு, இப்படம் நல்ல வசூலையும் பெற்றது. அதேபோல், சூரி நடிப்பில் வெளியான படம்தான் கருடன்.
விஸ்வாசம், நட்பு, பழிவாங்கல் ஆகியவற்றை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. மகாராஜா, கருடன் ஆகிய 2 படங்களும் சேர்த்து தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்திருக்கிறது. அதோடு, பார்க்கிங், தியேட்டரில் ஸ்னேக்ஸ் ஆகியவற்றின் வசூல் மட்டும் 110 கோடியை தொட்டிருக்கிறது.
அந்த 110 கோடியில் 35 சதவீதம் பி.வி.ஆர் மாலில் வசூல் ஆகியிருக்கிறது. பி.வி.ஆர் மாலில் பாப்கார்ன் விலை மிகவும் அதிகம் என்பதுதான் இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. மொத்தத்தில் மகாராஜா, கருடன் ஆகிய 2 படங்களும் சேர்ந்து தியேட்டர் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.