Cinema News
சூரி சொல்லவே இல்ல!. அட அந்த படத்தோட காப்பிதான் கருடனா?!.. கல்லா கட்றாங்கப்பா நல்லா!..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவது அதிகரித்து விட்டது. காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் அந்த முடிவை எடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. யோகிபாபுவும் பல படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். நடித்தும் வருகிறார். இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகர் சூரி.
மதுரையை சேர்ந்த இவர் சினிமா ஆசையில் சென்னை வந்தவர். பல படங்களில் கும்பலில் ஒருவராக கூட நின்றிருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் ரசிகர்களால் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இந்த படம் குப்பை.. பைசா கூட தேறாது!.. சத்யராஜின் முகத்துக்கு நேராக சொன்ன தயாரிப்பாளர்…
விஜய், அஜித், சூர்யா என பலரின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்தார். அதன்பின்னர்தான் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். இளையராஜா இசையில் உருவான இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
ஒருபக்கம் கொடி படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்கிற படத்திலும் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார். இந்த படம் இன்று தமிழகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக மதுரை பகுதியில் அதிக வரவேற்பு இருக்கிறது.
இந்த படத்தில் சசிக்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 20 கோடி வரை ஷேர் கொடுக்கும் என சொல்கிறார்கள். அதாவது, 50லிருந்து 60 கோடி வரை வசூல் செய்யும் என சொல்கிறார்கள்.
இந்நிலையில், கருடன் திரைப்படம் கன்னடத்தில் வெளிவந்த ‘கருட காமன விருஷ்ப வாஹனா’ என்கிற படத்தின் தழுவல் என சொல்லப்படுகிறது. காந்தாரா பட ஹீரோ ரிசப் ஷெட்டி இதில் நடித்திருந்தார். இந்த கதையின் உரிமையை வாங்கி தமிழுக்கு ஏத்தது போல் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து கருடன் படத்தை எடுத்தார்களா? இல்லை உரிமையை வாங்கமலேயே கதையை சுட்டார்களா என்பது போக போகத்தான் தெரிய வரும்.