Soori: காமெடி நடிகர் சூரி தற்போது கோலிவுட்டில் மிரட்டல் நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். அதனால் அவரின் சம்பளமும் உயர்ந்து இருக்கும் நிலையில் இன்று திரையரங்கில் ரிலீஸாகி இருக்கும் கருடன் படத்தில் அவரின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சின்ன சின்ன வேடங்களில் நடித்து கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி. ஆனால் அவர் நடித்த பரோட்டா காமெடி அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனால் அவரின் காமெடிக்காகவே நிறைய வாய்ப்புகள் குவிந்தது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ஹிட்டடித்தார்.
இதையும் படிங்க: கஜினி மாதிரி படையெடுத்த இயக்குனர்கள்! அசால்ட்டா தட்டி தூக்கிய லோகி.. கூலி படத்தில் சத்யராஜ் நடிக்க காரணம்
காமெடியனாக மட்டுமே இருந்த சூரியை ஹீரோவாக மாற்றினார் வெற்றிமாறன். இளையராஜா இசையமைக்க விடுதலை படத்தில் நடித்தார். காதல் காட்சிகள் முதல் ஆக்ஷன் காட்சிகள் வரை ஓவர்சீன் போடாமல் தன்னுடைய அக்மார்க் நடிப்பில் அசரடித்தார். சூரியின் நடிப்புக்கும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படம் மட்டுமல்லாமல் கொட்டுக்காளி, கருடன் படத்திலும் ஹீரோவாக சூரி நடித்து வருகிறார். இதில் கருடன் திரைப்படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது. துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் சசிகுமார், உன்னி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒத்த வெற்றிக்காக ஏங்கும் முன்னணி நடிகர்… தனிஒருவனை கொடுத்த மோகன்ராஜா… தட்டிவிட்டு மொக்கை வாங்குறாரே!..
இன்று திரைக்கு வந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக இப்படத்தில் சூரியின் நடிப்பும் ஆக்ரோஷமாக இருப்பதாக பேச்சுகள் வந்துக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் கதையை சூரி சொன்னதாக சமீபத்திய பேட்டியில் துரை செந்தில்குமார் தெரிவித்து இருக்கிறார். புரோமோஷனுக்காக மட்டுமே வெற்றிமாறன் பெயரை கதையில் போட்டோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் சூரிக்கு 8 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னர் லட்சத்தில் வாங்கிய சூரி நடிகராக இரண்டாவது வெற்றியை பெற இருக்கும் நிலையில் அவரின் சம்பளத்தினை படக்குழு அதிகளவில் உயர்த்தி இருக்கின்றனர். அதற்கடுத்த படங்களில் சூரி சரியான கதையை தேர்வு செய்தால் இன்னும் அவர் கேரியர் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…