இரண்டு டாப் நடிகைகள் காதலில் விழ காரணமாக இருந்த கெளதம் மேனன்…தோல்வியில் முடிந்த சோகம்!…

Published on: March 23, 2022
gautham menon
---Advertisement---

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் கெளதம் மேனன். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் தற்போது வரை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் படமாக உள்ளது.

எப்போது பார்த்தாலும் திகட்டாத ஒரு காதல் படமாக விண்ணைத் தாண்டி வருவாயா படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கெளதம் மேனன் சிம்பு கூட்டணியில் வெந்து தணிந்தது காடு என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

samantha- naga chaitanya
samantha- naga chaitanya

இந்நிலையில் இரண்டு டாப் நடிகைகள் காதலில் விழ இயக்குனர் கெளதம் மேனன் காரணமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை அப்படி ஏ மாய சேசாவே என்ற பெயரில் தெலுங்கில் கௌதம் மேனன் இயக்கி இருந்தார்.

அந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடித்தபோது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றனர். அதேபோல விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை ஹிந்தியிலும் கௌதம் மேனன் ரீமேக் செய்திருந்தார்.

prateik babbar with amy jackson

அதில் நடிகர் பிரதீக் பாபர் மற்றும் எமிஜாக்சன் நடித்திருந்தார்கள். படத்தின் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் இவர்கள் காதல் நீண்ட நாள் நிலைக்கவில்லை. இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே பிரிந்து விட்டார்கள். இரண்டு டாப் நடிகைகள் காதலில் விழ கெளதம் மேனனின் ஒரே ஒரு படம் காரணமாக இருந்துள்ளது.

Leave a Comment