இரண்டு சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை தவறவிட்டு கெரியரை பாழாக்கிய வாரிசு நடிகர்...!

திரையுலகில் களமிறங்கும் வாரிசு நடிகர்கள் அத்தனை பேரும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பதில்லை. அந்த வகையில் முதல் படத்திலேயே பெரிய இயக்குனரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் வாரிசு நடிகர் கெளதம் கார்த்திக்.
இவரது தந்தை கார்த்திக்கும் சரி, இவரின் தாத்தா முத்துராமனும் சரி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த மிகப்பெரிய நடிகர்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை கெளதம் கார்த்திக்கால் தற்போது வரை ஒரு நிலையான ஹீரோ அந்தஸ்த்தை பெற முடியவில்லை. இத்தனைக்கும் இவர் அறிமுகமானதே பிரபல இயக்குனர் மணிரத்னம் படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

karthik
ஆனால் அறிமுகமான முதல் படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் ஒரு சில படங்களை தவிர பெரும்பாலான படங்கள் தோல்வியை தான் தழுவின. மேலும் இவர் தேவராட்டம், முத்துராமலிங்கம் என சாதி சம்பந்தப்பட்ட படங்களில் அதிக கவனம் காட்டியதால் இவரை தேடி வந்த நல்ல பட வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டு விட்டாராம்.
அந்த வரிசையில் தற்போது கெளதம் கார்த்திக் தவறவிட்ட இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான கொம்பன் படத்தில் நடிக்க படக்குழுவினர் முதலில் கௌதம் கார்த்திக்கை தான் அணுகியுள்ளனர்.

gautham karthik
ஆனால் இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை என கூறி கெளதம் கார்த்திக் அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்திலும் முதலில் கௌதம் கார்த்திகை தான் படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் அந்த வாய்ப்பையும் அவர் நழுவ விட்டுள்ளார்.
ஒருவேளை இந்த இரண்டு படங்களிலும் அவர் நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு ஒரு நிலையான மார்க்கெட்டை அவர் பிடித்திருப்பாரோ என்னவோ. இப்படிப்பட்ட நல்ல கதைகளை விட்டுவிட்டு இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி போன்ற அடல்ட் படங்களில் நடித்து அவர் கெரியரை அவரே பாழாக்கி கொண்டார்.