ரெண்டும் செம ஜோடி!..கவுதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் திருமணம்...வெளியான புகைப்படங்கள்...
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் பல திரைபப்டங்களில் நடித்தார்.
அவருக்கென சரியான மார்க்கெட் உருவாகவில்லை என்றாலும் நம்பிக்கையுடன் திரையுலகில் போராடி வருகிறார். நடிகர் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்து வரும் ‘பத்து தல’ திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கும் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்தார். தேவராட்டம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமீபத்தில்தான் இது வெளியே தெரிய வந்தது. அதோடு, நவம்பர் 28ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இன்று அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வேஷ்டி சட்டை மற்றும் கல்யாண புடவை சகிதமாக இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்!…மாராப்ப விலக்கி அதிர வைக்கும் மாடல் அழகி….