சிம்புவை நம்பியிருக்க கூடாது.... புலம்பும் இளம் நடிகர்... பாதியில் நிற்கும் படப்பிடிப்பு..!

by ராம் சுதன் |
simbu
X

கோலிவுட்டில் சர்ச்சை நாயகன் என்றால் அது சிம்பு தான். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமாவதை வழக்கமாக கொண்டிருப்பார். பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளை தாண்டி கடந்த ஆண்டில் தான் மாநாடு என்ற ஒரு வெற்றி படத்தை வழங்கி ரிப்பேரான தனது பெயரை சரி செய்தார்.

அதற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது அப்படியே வந்தாலும் ஒழுங்காக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓபி அடிப்பது என சிம்பு மீது அடுக்கடுக்காக பல புகார்கள் எழுந்தன. ஆனால் மாநாடு பட வெளியீட்டிற்கு முன்பு எழுந்த பிரச்சனையின்போது சிம்பு கண்ணீர் விட்டு கதறியதை கண்டு அவர் திருந்தி விட்டார் என பலரும் நினைத்தனர்.

gautham karthik

gautham karthik

ஆனால் மனுஷன் இன்னும் திருந்தல என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆமாங்க. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்பு பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான பத்து தல.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்து வரும் நிலையில், ஒரு முக்கியமான கேரக்டரில் நடிகர் சிம்புவும் நடிக்க ஒப்பந்தமானார். அதன்படி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்புவால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

paththu thala

paththu thala movie

நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்ததால் தற்போது கதையில் சில மாற்றங்கள் செய்து சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தையும் படக்குழுவினர் படமாக்கி முடித்து விட்டனர். ஆனாலும் சிம்பு வந்தபாடில்லை. இதனால் இந்த படத்தின் கதாநாயகனான கௌதம் கார்த்திக் தான் சிம்புவை நம்பி ஏமாந்தது போதும் நாம் ஒத்துக்கொண்ட வேறு படங்களில் நடிக்க சென்றுவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். சிம்பு மறுபடியும் அவர் வேலையை ஆரம்பிச்சிட்டாருபோல.

Next Story