வேற லெவலில் சம்பவம் செய்ய தயாரான கௌதம் மேனன் -அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில்
சினிமாவில் நடிகர்கள் தவிர இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களும் தற்போது நடிப்பில் களமிறங்கி கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் இயக்குனர் என்றால் அது இயக்குனர் கெளதம் மேனன் தான். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை வழங்கிய கெளதம் மேனன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார்.
சமீபகாலமாகவே படங்களை இயக்குவதை தவிர்த்து படங்களில் நடிப்பதில் தான் கெளதம் மேனன் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கெளதம் மேனனின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
தற்போது விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடித்து வருகிறாராம். வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை மையாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்து வருகிறார்.
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விடுதலை படத்தில் தான் கெளதம் மேனன் முக்கியமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதுவரை கெளதம் மேனன் பல படங்களில் நடித்திருந்தாலும், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல் முறைய என்பது குறிப்பிடத்தக்கது.
கெளதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர பல படங்களில் நடித்தும் வருகிறார்.