அடுத்த மிஷ்கினா மாறிய கெளதம் மேனன்!.. சும்மா இருக்காரா பாருங்க!.. லியோ அப்டேட் கொடுக்குறாராம்!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் செகண்ட் சிங்கிளுக்கு பிறகு எந்த ஒரு புதிய அப்டேட்டையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் கௌதம் மேனனிடம் ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்க, நியூ படம் சூப்பராக வந்துள்ளது என்பதை அப்டேட் ஆக கொடுத்து ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளார்.

முன்னதாக இயக்குனர் மிஷ்கின் செல்லும் இடங்களில் எல்லாம் லியோ படம் பற்றிய அப்டேட்டை கூறுகிறேன் என லந்து கிளப்பி வந்த நிலையில், அதே வேலையை தற்போது இயக்குனர் கௌதம் மேனன் ஆரம்பித்து விட்டாரா? என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இது அக்டோபர் மாசமா இல்லை அப்டேட் மாசமா?.. இப்படி மூணு சிங்கம் ஒண்ணா களமிறங்குதே!..

நடிகர் விஜயை வைத்து யோகன் அத்தியாயம் ஒன்று படத்தை ஆரம்பித்த இயக்குனர் கௌதம் மேனன் அந்தப் படத்தை ஆரம்பிக்கவே இல்லை. எப்படியாவது விஜயுடன் பணியாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த கௌதம் மேனனுக்கு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

லியோ படத்தில் கௌதம் எனன் போலீஸ் அதிகாரியாக வருகிறாரா? அல்லது நடிகை திரிஷாவின் தந்தையாக வருகிறாரா என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கௌதம் மேனனிடம் லியோ படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்ட நிலையில், லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தளபதி விஜய் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ படம் பிரமாதமாக வந்திருக்கிறது. படத்தின் டப்பிங்கை நான் பண்ணும் போது என்னுடைய போஷனை பார்த்தேன் ரொம்பவே நல்லா வந்திருக்கு எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..

லியோ படம் வரும் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் படத்தில் நடித்த பிரபலங்கள் மூலமாகவும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் எனக் கூறுகின்றனர்.

 

Related Articles

Next Story