கிடப்பில் போடப்பட்ட வெந்து தணிந்தது காடு 2… விடிவியை குறிவைக்கும் கௌதம் மேனன்… அப்போ அவ்வளவுதானா??

by Arun Prasad |   ( Updated:2022-11-03 02:34:58  )
VTV2
X

VTV2

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக்கையும், நடிகர் சிம்புவுக்கு ஒரு விலை உயர்ந்த காரையும் பரிசாக வழங்கினார்.

VTK

VTK

“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது. ஆதலால் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

GVM

GVM

இந்த நிலையில் தற்போது “வெந்து தணிந்தது காடு 2” திரைப்படம் குறித்தான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது “வெந்து தணிந்தது காடு 2” திரைப்படத்தின் பணிகளை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கௌதம் மேனன் உருவாக்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படத்திலும் சிம்புவே நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் த்ரிஷா “விண்ணைத்தாண்டி வருவாயா” இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

VTV2

VTV2

“வெந்து தணிந்தது காடு 2” திரைப்படத்தின் Pre Production பணிகள் முழுவதுமாக தயாராகவில்லையாம். ஆனால் கௌதம் மேனன் ஏற்கனவே “விண்ணைத்தாண்டி வருவாயா” இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை முழுவதுமாக உருவாக்கி தயார் நிலையில் வைத்திருந்தாராம். ஆதலால்தான் இந்த அதிரடி மாற்றம் என கூறப்படுகிறது.

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என ரசிகர்கள் வெறிகொண்டு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது “விடிவி 2” திரைப்படம் உருவாக உள்ளதாக வெளிவரும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

Next Story