கௌதம் மேனனுக்கு நடந்த லவ் ஃபெயிலர்!! சினிமா வசனமாக மாறிப்போன முன்னாள் காதலியின் வார்த்தைகள்…

Published on: November 9, 2022
GVM
---Advertisement---

காதல்  திரைப்படங்கள் என்றாலே நம் நினைவில் வரும் இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவர் இயக்கிய “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம் காலத்திற்கும் பேசப்படும் காதல் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் வெளிவந்தபோதும் சரி, இப்போதும் சரி, பல இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்டுள்ளது. குறிப்பாக அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “உலகத்துல நிறைய பொண்ணு இருந்தும், நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்” என்ற வசனம் மிகவும் பிரபலமாக ஆனது.

GVM
GVM

அதன் பின் கௌதம் மேனன் இயக்கிய “நீதானே என் பொன் வசந்தம்” திரைப்படம் ஒரு யதார்த்த காதல் ஜோடியை நம் கண் முன் கொண்டுவந்திருந்தது. அத்திரைப்படம் வணிக ரீதியாக கைக்கொடுக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அது மட்டுமல்லாது கௌதம் மேனன் இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் அவரது பாணியில் பல தனித்துவமான காதல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவர் திரைப்படங்களில் இடம்பெறும் காதல் காட்சிகளை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் பலர் உண்டு.

AYM Movie
AYM Movie

இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு சிம்பு, மஞ்சிமோ மோகன் ஆகியோரின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “அச்சம் என்பது மடமையடா”. இத்திரைப்படத்தில் சிம்பு கதாப்பாத்திரத்திற்கு பல ப்ரேக்கப் கதைகள் இடம்பெறும். அதில் ஒரு பெண் “நாம் காதலித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் உன் கை விரல் கூட என் மேல் படவில்லை” என கூறிவிட்டு சென்றுவிடுவார்.

இதையு படிங்க: கமல் படம் பார்த்து போதையான ரஜினி… “3 பெக் அடிச்சும் ஏறல”… சூப்பர் ஸ்டாரின் நச்சுன்னு ஒரு கம்மெண்ட்…

GVM
GVM

இந்த காட்சி நிஜமாகவே கௌதம் மேனனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமாம். அதாவது கௌதம் மேனன் இளம்வயதில் ஒரு பெண்ணை காதலித்து வந்தபோது இந்த வசனத்தை கூறித்தான் அவரை விட்டு பிரிந்து சென்றாராம். இந்த வசனத்தை அப்படியே அந்த படத்தில் வைத்துள்ளார் கௌதம் மேனன்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.