அலைபாயுதே நான் எடுத்த படம்தான்!.. சர்ச்சையை கிளப்பிய கெளதம் மேனன்…

கோலிவுட்டில் பல காலங்களாக பிரபலமாக இருந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். இன்னமும் தன்னுடைய படைப்பாற்றல் திறமை தன்னைவிட்டு போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது திரைப்படங்கள் இருக்கின்றன.

அவர் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து மீண்டும் அதிக வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார் மணிரத்னம்.

அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். மணிரத்னத்தை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு சினிமாவிற்குள் வந்தவர் இயக்குனர் கெளதம் மேனன். எனவே அவரது திரைப்படங்களில் மணிரத்னத்தின் சாயலை அதிகமாக பார்க்க முடியும்.

சர்ச்சையை கிளப்பிய கெளதம் மேனன்:

காதல் காட்சிகளில் துவங்கி பட வசனங்கள் வரை பல விஷயங்கள் கெளதம் மேனன் திரைப்படத்திற்கும், மணிரத்னம் திரைப்படத்திற்கும் இடையே ஒத்துப்போவதை பார்க்க முடியும்.

gowtham menon

இந்த நிலையில் தெலுங்கில் ஒரு பேட்டிக்கு சென்றிருந்தார் கெளதம் மேனன். அங்கே இருந்த தொகுப்பாளர் அலைபாயுதே திரைப்படமும் கெளதம் மேனன் இயக்கிய திரைப்படம் என நினைத்துக்கொண்டு, அலைபாயுதே திரைப்படத்தில் பணிப்புரிந்தது எப்படி இருந்தது சார் என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த கெளதம் மேனன் நன்றாக இருந்தது, மாதவனுடன் பணிப்புரிந்தது நன்றாக இருந்தது என கூறியுள்ளார். சமீபத்தில் இதுப்பற்றி பேசிய கெளதம் மேனன், அவர்களிடம் அது என் படம் இல்லை என விவரித்து கொண்டிருப்பதற்கு பதில் நான்தான் மணிரத்னம் என சென்றுவிடலாம். எனவேதான் அலைபாயுதே திரைப்படத்தை என் படம் என கூறினேன்” என்றார் கெளதம் மேனன்.

இதையும் படிங்க: இனி அவரை நேருக்கு நேர் பாக்குறதே கஷ்டம்..! இசையமைப்பாளர் இமானிடம் சண்டை செய்த சிவகார்த்திகேயன்…

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it