தனுஷுக்கு இது பிடிக்கவில்லை… இனிமே வாய்ப்பே இல்லை… சோகத்தில் கௌதம் மேனன்…
தமிழின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தனது வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு புது முயற்சியை எடுத்திருக்கிறார் கௌதம் மேனன் என பலரும் பாராட்டி வந்தனர்.
இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. எனினும் இத்திரைப்படம் வெளியாக மிகவும் தாமதமானது.
பொருளாதார சிக்கல் காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இத்திரைப்படத்திற்கு முதலில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பாதாக இருந்தது. அதன் பின் தர்புகா சிவா இசையமைக்க ஒப்புக்கொண்டார்.
முதலில் இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் சில காரணங்களால் 2018 ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போனது. அப்படியும் படம் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து ஒரு வழியாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கௌதம் மேனனிடம் சில ஒப்பந்தங்கள் போட்டு இத்திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார். இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளிவந்தாலும் சரியாக எடுபடவில்லை.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் “என்னால் சிம்புவை வைத்துபடம் பண்ணிவிட்டோம், ஆனால் தனுஷை வைத்து சரியாக படம் பண்ண முடியவில்லயே என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து ஒன்றை முயற்சி செய்தோம். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை.
அத்திரைப்படத்தை ஒழுங்காக முடிக்க முடியவில்லை. தயாரிப்பாளருக்கும் தனுஷுக்கு சில பிரச்சனைகள் எழுந்தது. ஆதலால் தனுஷுக்கு அத்திரைப்படத்தில் நடிக்கும் விருப்பமே இல்லாமல் போயிற்று. ஒரு கட்டத்திற்கு மேல் தனுஷை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. அவ்வளவு சிக்கலில்தான் அத்திரைப்படத்தை முடித்தேன்.
ஆனால் நான் அவரை பழிபோட விரும்பவில்லை. மீண்டும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணலாம். ஆனால் என்னோடு பணியாற்ற அவருக்கு விருப்பம் இருக்கிறதா என்பதே எனக்கு தெரியவில்லை” எனவும் கூறியுள்ளார். எனினும் இருவரும் மீண்டும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.