கௌதம் மேனனிடம் கதை சொன்ன கமல்!.. முடியாது என சொல்லி மறுத்த சம்பவம்.. என்ன படம் தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-05-05 15:48:43  )
gautham
X

gautham

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் கௌதம் மேனன். இவரின் படங்கள் தான் இவரின் அடையாளம். காதல் கதையை அழகாக மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் ஒரு காதல் இளவரசனாக வலம் வருகிறார் கௌதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை கொடுத்ததன் மூலம் இளம் தலைமுறையினருக்கு ஒரு வரப் பிரசாதமாகவே திகழ்ந்தார்.

இனிமேல் அந்த மாதிரியான படங்களை பார்க்க முடியாதா என்ற ஏக்கம் வளரும் தலைமுறையினருக்கு இருந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் சமீப காலமாக கௌதம் மேனன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்.

சமீபத்தில் கூட விடுதலைப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்
மேலும் லியோ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி கூறிய கௌதம் மேனன் விஜயுடன் முழுவதுமாக பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தில் வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இவர் எடுக்கும் பெரும்பாலான படங்கள் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை வைத்தே தான் எடுப்பதாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் கமலுடன் வேட்டையாடு விளையாடு என்ற படத்தை இயக்கியதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றால் கௌதம் மேனன்.

அந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றியும் கமலுடன் நடந்த சில உரையாடல்களை பற்றியும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது வேட்டையாடு விளையாடு படத்தின் கதையை கமலுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது முதல் பாதி முடிந்தவுடன் கமல் போதும் என்று சொல்லிவிட்டாராம்.

இதிலிருந்தே இரண்டாம் பாதியில் என்னவாக இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டாராம் கமல். வேட்டையாடு விளையாடு படத்தின் கதை விவாதத்திற்கு முன்பாகவே கமல் நடித்த தசாவதாரம் படத்தின் கதையைப் பற்றி கௌதம் மேனனிடம் விவாதித்தாராம் கமல். இதைப் பற்றி கூறிய கௌதம் மேனன் "முதன்முதலில் தசாவதாரம் படத்திற்கு விதை போட்டதே அன்று நடந்த அந்த உரையாடல் தான்" என்று கூறினார்.

கமல் தன்னிடம் தசாவதாரம் படத்தில் ஒரே மாதிரியான பத்து கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் அதற்கான கதையை தான் தற்போது ரெடி பண்ணி கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதைப் பற்றி கௌதம் மேனன் கமலிடம் "எனக்கு இரண்டு கதாபாத்திரங்களை வைத்து ஒரு படத்தை இயக்குவதே மிகவும் சிரமம், இதில் பத்து கதாபாத்திரங்களை கொண்டு படம் எடுப்பது என்பது முடியாத காரியம் "என்று கூறினாராம்.

உடனே கமல் "அப்புறம் வேற என்ன கதை தான் இருக்கிறது "என்று கௌதம் மேனனிடம் கேட்டிருக்கிறார் .அதன் பிறகு தான் வேட்டையாடு விளையாடு படத்தின் கதையை சொல்ல அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாம்.

இதையும் படிங்க : கமல் படங்களைத் தவிர வேறு எந்த படங்களையும் பார்ப்பதில்லை.. காரணத்தை கூறிய கன்னடத்துப் பைங்கிளி!..

கௌதம் மேனன் முடியாது என்று சொன்ன பிறகுதான் அந்த தசாவதாரம் படத்தை இயக்கும் பொறுப்பை கே எஸ் ரவிக்குமாரிடம் ஒப்படைத்திருக்கிறாராம் கமல். இதை அந்தப் பேட்டியின் போது கௌதம் மேனன் கூறினார்.

Next Story