காலையில் ஐடி ஆபிஸ்.. மாலையில் டைரக்டர் வாசல்… கௌதம் வாசுதேவ் மேனனின் ஆரம்பகாலம் இவ்வளோ மோசமா?

by Akhilan |
காலையில் ஐடி ஆபிஸ்.. மாலையில் டைரக்டர் வாசல்… கௌதம் வாசுதேவ் மேனனின் ஆரம்பகாலம் இவ்வளோ மோசமா?
X

GV Menon: தமிழ் சினிமாவுக்கு காதலுக்காக நிறைய விஷயங்களை கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனின் ஆரம்பகாலம் படுமோசமாகவே இருந்து இருக்கிறது. அவருக்கு எப்படி முதல்வாய்ப்பு கிடைத்தது என்பதையும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் கோலிவுட்டில் எப்போதுமே வித்தியாசமான காதல் கதைக்கு சொந்தக்காரர். அவரின் எல்லா படங்களுமே நல்ல வரவேற்பை பெறுவதில் இருந்து தவறியதே இல்லை. அப்படிப்பட்ட ஜிவிஎம் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு ரொம்பவே அவஸ்தைப்பட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 100 கோடிக்கும் மேல் கல்லா கட்டிய திரைப்படங்கள்!.. மாஸ் காட்டும் ஜெயிலர்..

ஆனால் மணிரத்னம் ஆபிஸில் யாருமே பேசாமல் தவிர்த்துவிட்டனராம். இரண்டரை வருடமாக இதே வாழ்க்கையாக இருந்து இருக்கிறார். ஆனால் அப்போதே தன்னுடைய குடும்பத்திடம் தனக்கு ஐடியில் ஆசை இல்லை. படம் இயக்குவது தான் என் கனவு எனச் சொல்லிவிட்டே செல்வாராம். அதன்பின்னர் ராஜீவ் மேனனிடம் பேசும் வாய்ப்பு கிடைக்க அவர் உடனே உதவி இயக்குனராக சேர்ந்து கொள்ள சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க: கொளுந்துவிட்டு எரிந்த டப்பிங் யூனியன் பிரச்னை!… தடைகளை உடைத்து தலைவரான ராதாரவி…

மின்சாரக் கனவு படத்தில் உதவி இயக்குனராக இருந்தாராம். ஆனால் பெரிய அளவில் எதுவும் கத்துக்க முடியவில்லையாம். அதன்பின்னர் இயக்குனர் ஜே.பி.விஜயிடம் இணைந்து நிறைய விளம்பரங்களில் பணிபுரிந்து இருக்கிறார். அங்கு தான் டெக்னிக்கலாக கற்றுக்கொண்டாராம்.

அதனை தொடர்ந்து, நிறைய படித்த பிறகே மின்னலே படத்தினை இயக்கி இருக்கிறார். ஆனால் அந்த படத்தில் நிறைய செய்யாமல் விட்டாராம். அதனால் மின்னலே படத்தினை இன்று வரை திரும்பி பார்க்கவே இல்லையாம். அங்கு தொடங்கிய கௌதம் மேனன் சினிமா வாழ்க்கை இன்று நடிகராகவும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story