ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் கௌதம் மேனன்… பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய பிரபலத்துடன் இணைகிறாரா??
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக திகழ்ந்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து, “மின்னலே” திரைப்படத்தை இயக்கினார் கௌதம் மேனன்.
தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனராக திகழ்ந்த கௌதம் மேனன், அதனை தொடர்ந்து “காக்க காக்க”, “வேட்டையாடு விளையாடு”, “வாரணம் ஆயிரம்”, “விண்ணைத்தாண்டி வருவாயா” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இத்திரைப்படங்களின் வெற்றிகளை தொடர்ந்து தமிழின் முன்னணி இயக்குனராக வலம் வந்தார் கௌதம் மேனன். சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.
கௌதம் மேனன் சமீபகாலமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். “கோலி சோடா 2”, “டிரான்ஸ்”, “ருத்ர தாண்டவம்”, “சீதா ராமம்” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது ஹீரோவாக ஒரு புதிய திரைப்படத்தில் களமிறங்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: “அஜித் இப்படி செய்றதுக்கு ரஜினிதான் காரணம்”… ஓஹோ இதுதான் விஷயமா??
அதாவது ஜெய் பரமசிவம் என்ற புதுமுக இயக்குனர் இயக்க இருக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் பாடலாசிரியராக பணிபுரிந்த இளங்கோ கிருஷ்ணன், கௌதம் மேனன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் வசனங்களை எழுதவுள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.