ஸ்கிரிப்ட் ரெடி..! ஹீரோயின் ரெடி...கமல் வருவாரானு தெரியல..! காத்துக் கொண்டிருக்கும் கௌதம் மேனன்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தாறுமாறாக வெற்றியடைந்த விக்ரம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் கமல். அடுத்ததாக நீண்ட நாள்களாக போராடி வரும் இந்தியன் - 2 படத்திற்காக தன்னை பிஸியாக வைத்துக் கொள்வார் என தெரிகிறது. அதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான க்ரைம் திரில்லர் படம் வேட்டையாடு விளையாடு திரைப்படம். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார்.
ஏற்கெனவே படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முடிவினை கௌதம் மேனன் அறிவித்திருந்தார். தற்போது
படத்திற்காக 120 பக்கம் கொண்ட ஸ்கிரிப்ட் எழுதியாச்சு. மீதமுள்ள கதையை செதுக்கிக் கொண்டு இருக்கிறேன். கமல் சார் நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் என்னோட ஆசை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் படத்தில் அனுஷ்கா அல்லது கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாம் என்று பேசி வருகிறார்களாம். கமல் அவரது பிஸியான வேலைகளை எல்லாம் முடித்த பிறகு மீண்டும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கௌதம் மேனன் கூறினார்.