Categories: latest news

அடுத்த ஸ்டார் ஜோடி ரெடி.. பரபரப்பை கிளப்பும் அதிரடி செய்தி!!

நடிகர் கௌதம் கார்த்திக், சீனியர் நடிகர் கார்த்திக் மற்றும் முத்துராமனின் கலை உலக வாரிசு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர்.

நடிகை மஞ்சிமா மோகன், கேரளாவை சேர்ந்த இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா திரை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்களாக இல்லாவிட்டாலும் ஆண்டிற்கு ஒரு படம் நடித்து தங்கள் மார்கெட்டை தக்கவைத்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து “முத்துராமலிங்கம்” என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாக தகவல் கசிந்தது.

இந்த நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் இருவீடார் சம்மதத்தை பெற்று இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வந்த செய்தி இணைய உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Published by
Rohini