கௌதமியின் மகளா இது..? பிரபல வாரிசு நடிகரோடு ஜோடி சேர்க்க படாதபாடு படும் நடிகை...!
80களில் ”சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா” என்ற பாடல் மூலம் ரசிகர்களை இந்த பொண்ணு யாருனு தன் பக்கம் கவனத்தை திருப்ப வைத்தவர் நடிகை கௌதமி. இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமான படம் ரஜினியுடன் சேர்ந்து நடித்த குருசிஷ்யன் படமாகும். இதில் நடிகர் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் வெளியான நிறைய படங்கள் இவரை மற்ற முன்னனி நடிகைகளோடு போட்டி போட வைத்தது. ராதிகா, பானுப்பிரியா, ரேவதி, அமலா போன்ற நடிகைகள் எல்லாம் அந்த நேரத்தில் மிகவும் உச்சத்தில் இருந்தனர். அந்த லிஸ்டில் இவரும் போய் சேர்ந்து கொண்டார். இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மகள் பிறந்த அடுத்த வருடத்திலயே விவாகரத்தும் செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட 13 வருடங்கள் கமல் ஹாசனுடன் தொடர்பில் இருந்த இவர் தனது ப்ளாக் மூலம் தாங்கள் அதிகாரபூர்வமாக பிரிகிறோம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பின் தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை கௌதமி. எல்லா தடைகளையும் தாண்டி தன் மகளான சுப்புலட்சுமியை சினிமாவிற்குள் வரவழைக்க முயற்சி செய்து வருகிறார்.
நடிகர் விக்ரமிம் மகனும் நடிகருமான துருவ்வுடன் சேர்ந்து கௌதமியின் மகள் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம். அதனால் கௌதமி தன் மகளுக்கு நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். பேச்சு பயிற்சி, நடன பயிற்சி, போன்ற பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து வருகிறாராம். கமலின் பிரிவிற்கு பிறகு இப்பொழுதுதான் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.